Sunday, 6 November 2016

பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க ஏற்பாடு

பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க ஏற்பாடு
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று முதன்மை கல்வி அதிகாரிகள் கூட்டத்தில் கூறப்பட்டது.தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் கூட்டம் சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா தலைமை தாங்கினார். அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி, தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குனர் மைதிலி ராஜேந்திரன் மற்றும் பள்ளி கல்வித்துறை இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் கலந்துகொண்டனர்.அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளின் பெயர், பெற்றோர், முகவரி, பிறந்தநாள், புகைப்படம், பெற்றோர்களின் தொழில், வருமானம் உள்ளிட்ட அனைத்து புள்ளி விவரங்களையும் ஆசிரியர்கள் சேகரித்து வருகிறார்கள். இதுவரை 1 கோடியே 5 லட்சம் பேர்களிடம் விவரம் சேகரிக்கப்பட்டது.எஞ்சிய 10 லட்சம் பேர்களிடம் அந்த புள்ளிவிவரங்களை 2 மாதத்திற்குள் சேகரிக்கும்படி அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டது.அனைத்து பள்ளிகளிலும் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் தேர்ச்சியை அதிகரிக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. அதற்காக பள்ளிக்கூட நேரம் தவிர மாலையில் சிறப்பு வகுப்புகள் நடத்தியும், மெதுவாக கல்வி கற்கும் மாணவ-மாணவிகளுக்கு கையேடு வழங்கியும் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் என்று முதன்மை கல்வி அதிகாரிகளிடம் கூறப்பட்டது.அனைவருக்கும் கல்வி திட்டம், இடைநிலை கல்வி திட்டம் ஆகிய திட்டங்கள் சிறப்பாக நடக்க ஏற்பாடுகள் செய்யவும் கூட்டத்தில் கல்வித்துறை உயர் அதிகாரிகள் வலியுறுத்தினார்கள்.



No comments:

Post a Comment

Guestbook

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் கல்விச்சோலை இமெயில்களை பெற முடியும்.