Sunday, 18 September 2016

கால்நடை செவிலிய உதவியாளர் படிப்பு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

கால்நடை செவிலிய உதவியாளர் படிப்பு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் 11 மாத கால்நடை செவிலிய உதவியாளர் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் செப். 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்தப் படிப்புக்கு செப்டம்பர் 9 வரை www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் செப்டம்பர் 21 வரை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில், கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பித்த படிவங்களை பதிவிறக்கம் செய்து ""தலைவர், சேர்க்கை குழு, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்,மாதவரம் பால்பண்ணை, சென்னை - 51'' என்ற முகவரிக்கு செப்டம்பர் 28-க்குள் சென்று சேர வேண்டும் என்று பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Guestbook

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் கல்விச்சோலை இமெயில்களை பெற முடியும்.