Sunday, 18 September 2016

சிவில் சர்வீசஸ் தேர்வு: 'ரிசல்ட்' வெளியீடு

சிவில் சர்வீசஸ் தேர்வு: 'ரிசல்ட்' வெளியீடு
இந்திய அரசு துறைகளின் உயர் பதவிகளான, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., போன்ற, 24 வகை பதவிகளுக்கு, 1,049 காலியிடங்களுக்கு, சிவில் சர்வீசஸ் தேர்வு எனப்படும், முதல்நிலை தகுதித் தேர்வு, ஆக., 7ல் நடந்தது. இந்த தேர்வுக்கு, 11.36 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்; ஆனால், 6.24 லட்சம் பேர் மட்டுமே பங்கேற்றனர். தேர்வில், 33 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள், முதன்மை தேர்வுக்கு தேர்வு செய்யப்படுவர். அதன்படி, யு.பி.எஸ்.சி., எனப்படும், மத்திய பொது பணியாளர் தேர்வாணையம், முதல்நிலை தேர்வு முடிவை வெளியிட்டது; இதில், 15 ஆயிரத்து, 445 பேர் முதன்மை தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். தற்போது, தேர்ச்சி பெற்றுள்ளவர்கள், தங்களது விருப்ப பாடத்தின் படி, நவ., 12ல் நடக்கும், முதன்மை தேர்வை எழுத வேண்டும்; அதில், தேர்ச்சி பெறுவோர், நேர்முக தேர்வில் பங்கேற்க வேண்டும்; நேர்முக தேர்வுக்கு பின், இறுதி பட்டியல் வெளியாகும்.


No comments:

Post a Comment

Guestbook

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் கல்விச்சோலை இமெயில்களை பெற முடியும்.