Sunday, 18 September 2016

பரபரப்பாக செயல்பட்ட அரசு அலுவலகங்கள்

பரபரப்பாக செயல்பட்ட அரசு அலுவலகங்கள்
தமிழகத்தில், 'பந்த்' நடத்தப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள எழிலக வளாகம், மின் வாரியம் உள்ளிட்டஅரசு அலுவலகங்கள், வழக்கத்தை விட, நேற்று பரபரப்பாக செயல்பட்டன.இதுகுறித்து, அரசு ஊழியர்கள் கூறியதாவது:சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், வெள்ளிக்கிழமை அலுவலகத்திற்கு சற்று தாமதமாக தான் வருவோம். ஆனால், இன்று தாமதமாக வந்தாலோ, விடுப்பு எடுத்தாலோ, 'பந்த்'க்கு ஆதரவு தெரிவிப்பதாக, உயரதிகாரிகள் கருதுவர்; அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்பதற்காக, சரியான நேரத்திற்கு அலுவலகம் வந்தோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


No comments:

Post a Comment

Guestbook

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் கல்விச்சோலை இமெயில்களை பெற முடியும்.