Friday, 16 September 2016

அரசு கலைக்கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

அரசு கலைக்கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
சேலம் அரசு கலைக் கல்லூரியில் காலியாக உள்ள கௌரவ விரிவுரையாளர்கள் பணிக்கு செப்டம்பர் 20 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம் அரசு கலைக் கல்லூரியில் காலியாக உள்ள கௌரவ விரிவுரையாளர்கள் பணிக்கு (சுழற்சி-1, சுழற்சி-2) புதிதாக விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர் 20 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்-1, கணினிபயன்பாட்டியல்-11, விலங்கியல்-1, மனித உரிமைகள் துறை-1 ஆகிய துறைகளில் உள்ள காலிப்பணிகள் சுழற்சி அடிப்படையில் நிரப்பப்படும். விண்ணப்பித்தவர்களுக்கு செப்டம்பர் 26 ஆம் தேதி காலை 10 மணிக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் என அரசு கலைக் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முருகேஸ்வரி தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment

Guestbook

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் கல்விச்சோலை இமெயில்களை பெற முடியும்.