Monday, 19 September 2016

சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு குடிமை பணி தேர்வு பயிற்சி மையத்தில் 225 மாணவர்களுக்கு உதவித்தொகையுடன் பயிற்சி

சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு குடிமை பணி தேர்வு பயிற்சி மையத்தில் 225 மாணவர்களுக்கு உதவித்தொகையுடன் பயிற்சி
தமிழக அரசு ஏற்பாடு
சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு குடிமை பணி தேர்வு பயிற்சி மையத்தில் 225 மாணவர்களுக்கு உதவித்தொகையுடன் பயிற்சி வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:2016-ம் ஆண்டிற்கான மத்திய தேர்வாணைய குழுவின் (சிவில் சர்வீசஸ்) முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன், முதன்மைத் தேர்வுக்காக மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம், பி.எஸ்.குமாராசாமி ராஜா சாலை, சென்னை-28 என்ற முகவரியில் உள்ள காஞ்சி வளாகத்தில் அமைந்துள்ள அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையத்தில் மூன்று அலுவலக வேலைநாட்களில் வழங்கப்படும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெற்று சேர்க்கை நடைபெறும். முதன்மை தேர்வுக்கான பயிற்சிக்கு தமிழ்நாட்டை சார்ந்த மொத்தம் 225 மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். இப்பயிற்சி மையத்தில் பயின்றவர்கள் தவிர இதர பயிற்சி மையத்தில் பயின்ற மாணவ-மாணவிகளும், எந்த பயிற்சி மையத்திலும் சேராமல் தனியே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களும் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.
உதவித்தொகையுடன் பயிற்சி
பயிற்சி வகுப்புகள், மாணவர் சேர்க்கை முடிந்தவுடன் ஆரம்பித்து முதன்மைத்தேர்வுகள் தொடங்கும் வரை நடைபெறும். பயிற்சிக் காலத்தில் கட்டணமில்லா விடுதி வசதி உண்டு, இப்பயிற்சிக் காலத்தில் மாதம் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் உதவித்தொகை தமிழக அரசால் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படும்.மேலும் விவரங்களுக்கு முதல்வர், அகில இந்திய குடிமைப்பணித்தேர்வு பயிற்சி மையம், சென்னை-28 என்ற முகவரியிலும், 044-24261475 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Guestbook

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் கல்விச்சோலை இமெயில்களை பெற முடியும்.