Tuesday, 31 May 2016

உலகப்புகழ் சௌதாம்ப்டன் பல்கலை.யில் எம்.எஸ்சி படிக்க ஆசையா...!!

உலகப்புகழ் சௌதாம்ப்டன் பல்கலை.யில் எம்.எஸ்சி படிக்க ஆசையா...!!
பிரிட்டனில் புகழ்பெற்ற சௌதாம்ப்டன் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி (ஆடியோலஜி) படிப்பதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.1972-ல் இந்தப் படிப்பு சௌதாம்ப்டன் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டது. ஆடியோலஜிக்குப் புதியவர்கள், பேச்சு தெரப்பி நிபுணர்கள், டாக்டர்கள் உள்ளிட்டோருக்கு இந்தப் படிப்பு மிகவும் உதவிகரமாக இருக்கும். இந்தப் படிப்பில் சேர ஹானர்ஸ் படித்திருக்கவேண்டும். மேலும் ஐஇஎல்டி தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றிருக்கவேண்டும். கல்வி உதவித்தொகையும் மாணவர்கள்பெற முடியும்.2016 செப்டம்பரில் இந்த படிப்பு தொடங்கும்.ஜூன் 30-க்குள் விண்ணப்பங்களை ஆன்-லைனில் அனுப்பவேண்டும். விண்ணப்பங்களைப் பெற http://www.southampton.ac.uk/engineering/postgraduate/taught_courses/audiology/msc_audiology.page என்ற லிங்க்கைக் கிளிக் செய்யும்விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க 31.05.2016 கடைசி

பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க 31.05.2016 கடைசி
பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய 31.05.2016 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிஇ படிப்பில் சேருவதற்கு இந்தாண்டு முதல் ஆன்லைனில் விண்ணபிக்கும் புதிய நடைமுறையை அண்ணா பல்கலை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, கடந்த ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியது. பி.இ. படிப்பில் சேருவதற்கான விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய நாளை கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் சென்னை அண்ணா பல்கலைக்கழக, செயலருக்கு வந்து சேரும் படி ஜூன் 4-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த 2 லட்சத்து 45 ஆயிரத்து 217 பேர் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துள்ளனர். இதில் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 836 பேர் கட்டணத்தை செலுத்தியுள்ளனர்.2016-17-ம் கல்வியாண்டு பொறியியல் ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் ஜூன் கடைசி வாரம் முதல் நடத்த உள்ளது.விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டிவழங்க அரசு ஒப்புதலா?

தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டிவழங்க அரசு ஒப்புதலா?
சமூக வலைதளங்களில் உலாவரும் தகவலுக்கு அதிகாரிகள் மறுப்பு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே காலை சிற்றுண்டி வழங்கப்படும் என சமூக வலை தளங்களில் தவறான தகவல் தற்போது வேகமாகப் பரவி வருகிறது.
தமிழகம் முழுவதும் பள்ளிகள் ஜூன் 1-ம் தேதி முதல் திறக்கப்பட உள்ளன. இதற்கிடையே, விவசா யம் உள்ளிட்ட வேலைகளில் ஈடுபடும் பெற்றோர், அதிகா லையிலேயே சென்று விடுவதால், குழந்தைகளுக்கு உணவு சமைக்க முடியாத நிலை உள்ளது.இதனால் கிராமப்புற குழந்தைகள் பெரும்பாலானோர் காலையில்சாப்பிடாமலேயே பள்ளிக்கு வருகின்றனர். இதனால் ரத்தசோகை,சத்துக் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.எனவே, மதிய உணவுத் திட்டம் போலவே காலையிலும் சிற்றுண்டி வழங்க வேண்டும் என ஆசிரியர் சங்கத்தினர் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
தமிழக முதல்வராக ஜெய லலிதா, கடந்த 23-ம் தேதி மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டபோது விவசாயிகளுக்கான பயிர்க்கடன்தள்ளுபடி, மதுக்கடைகள் நேரம் குறைப்பு மற்றும் 500 கடைகள் மூடல், திருமண நிதியுதவித் திட்டத்தில் வழங்கப்பட்ட 4 கிராம் தங்கம், இனி 8 கிராமாக உயர்த்துவது, வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம், நெசவாளர்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் ஆகிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.இந்நிலையில், மாணவர் களுக்கு மதிய உணவு வழங்குவது போல தொடக்கப் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு பள்ளிகளிலேயே காலை சிற்றுண்டி வழங்கப்படும் என ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தார். அந்த திட்டத்தில் முதல்வர் கையெழுத்திட்டதாக வாட்ஸ்-அப், முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் வேகமாக தகவல்கள் பரவ ஆரம்பித்துள்ளன. பொதுமக்களும் இந்த தகவலை பகிர்ந்துகொண்டனர்.
மேலும், ஒவ்வொரு நாளும் மாணவர் களுக்கு என்னென்ன கலவை உணவுகள் வழங்கப்பட உள்ளன என்பதற்கான பட்டியல் குறித்த விவரங்களும் பரவி வருகிறது. இதனால் காலை உணவு பள்ளியிலேயே கிடைக்கும் என பெற்றோரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.ஆனால், காலை சிற்றுண்டி குறித்த எந்த அறிவிப்பும் இதுவரை பள்ளிகளுக்கு கிடைக்கவில்லை.இதுகுறித்து கல்வித் துறையினர் கூறியதாவது: மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படுவது குறித்த தகவல்கள் மட்டும் பரவி வருகிறதே தவிர, அதிகாரிகளிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக இதுவரை எந்த அறிவிப்பும் கிடைக்கவில்லை. அதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டாலும், சில மாதங்களுக்குப் பின்னரே அந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்றனர்.விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆசிரியர்கள், வாசிப்பில் ஆர்வம் காட்டாதது கவலைக்குரியது,இயக்குனர்...

ஆசிரியர்கள், வாசிப்பில் ஆர்வம் காட்டாதது கவலைக்குரியது,இயக்குனர்...
ஆசிரியர்களுக்கு வாசித்தல் பழக்கம் இல்லாதது கவலைக்குரியது' என, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
கோடை விடுமுறை முடிந்து, ஜூன் 1ல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. புதிய கல்வி ஆண்டில், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பது குறித்த வழிமுறைகளை, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், சுற்றறிக்கையாக அனுப்பி உள்ளார்.
அதன் முக்கிய அம்சங்கங்கள்:
பள்ளி திறக்கும் முன்பே வளாகத்தை சுத்தம் செய்து, பராமரித்திருக்க வேண்டும்
கடந்த ஆண்டை விட, மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும். குறைவாக மாணவர் உள்ள பகுதிகளில், வீடு வீடாகச் சென்று, கல்வி கற்க வராத மாணவர்களை பள்ளியில் சேர்க்க வேண்டும்
ஒவ்வொரு நாளும் என்ன பாடம் எடுக்க வேண்டும் என்பது குறித்த, பாடத்திட்டத்தை வாரத்தின் முதல் நாளே ஆசிரியர்கள் தயார் செய்து, தலைமை ஆசிரியர் பார்வைக்கு அனுப்ப வேண்டும்
நீதி போதனை வகுப்புகளை தவறாமல் நடத்த வேண்டும். மாணவர்களுக்கு வாசிப்புத் திறன் மற்றும் எழுத்து பயிற்சியை அதிகரிக்க வேண்டும்
ஆசிரியர்களும், தங்கள் வாசித்தல் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்; பல ஆசிரியர்கள், வாசிப்பில் ஆர்வம் காட்டாதது கவலைக்குரியது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கல்வித்துறையில் 'டி.இ.டி.,' எனும் தீராத குளறுபடி! எதிர்பார்ப்பில் ஒரு லட்சம் ஆசிரியர் பட்டதாரிகள்...

கல்வித்துறையில் 'டி.இ.டி.,' எனும் தீராத குளறுபடி! எதிர்பார்ப்பில் ஒரு லட்சம் ஆசிரியர் பட்டதாரிகள்...
தமிழகத்தில் மூன்று ஆண்டுகளாக ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) நடக்காததால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பட்டதாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.,) அறிவுறுத்தலால், தமிழகத்தில் 15.11.2011ல், தகுதி தேர்வு அடிப்படையில் ஆசிரியர் நியமனம் நடக்கும் என (அரசாணை எண்: 181) உத்தரவிடப்பட்டது.இதன்படி 2012, 2013ல் டி.இ.டி., தேர்வுகள் நடத்தப்பட்டன. 2013ல் நடந்த தேர்வில் அதிக எண்ணிக்கையிலான தேர்ச்சியால் 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டு, மூன்று ஆண்டுகளாக வழக்குகள் நிலுவையில் உள்ளன.அதேபோல், '90 சதவீதம் மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி என்பதில் இருந்து, அரசு சார்பில் 5 சதவீதம் சலுகை அளிக்கப்பட்டு 85 சதவீதம் அதாவது, 90 மதிப்பெண்ணில் இருந்து 82 மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி,' என அறிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றனர். பலர் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி நியமனம் பெற்றனர்.ஆனால், இதுதொடர்பாகவும் வழக்குகள் தொடரப்பட்டதால் அந்த வழக்குகளும் உச்சநீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளன.இவ்வழக்குகளை முடித்து, தேர்ச்சி பெற்றவர்கள் பயன்பெற, கடந்த மூன்று ஆண்டுகளாக கல்வித்துறை அதிகாரிகள் போதிய ஆர்வம் காட்டவில்லை.மேலும், 23.8.2010க்கு பின் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி நியமனம் பெற்ற 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வரும் நவ.,க்குள் டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.டி.இ.டி., தேர்வு அறிவிக்கப்படாதபட்சத்தில் இவர்களின் பணி நியமனத்திலும் புதிய குளறுபடி ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மதுரை மாவட்ட செயலாளர் முருகன் கூறியதாவது:டி.இ.டி., தேர்வில் அரசு அறிவித்த சலுகை என்பது கொள்கை முடிவு. குறிப்பாக, 5 சதவீதம் சலுகை மதிப்பெண் விஷயத்தில் அரசு ஆர்வம் காட்டாததால் நீதிமன்றத்தில் இத்தனை ஆண்டுகளாக வழக்குகள் நிலுவையில் உள்ளன. என்.சி.டி.இ.,யின் முரண்பாடான பாடத் திட்டம், தமிழக அரசின் 'வெயிட்டேஜ்' முறையும் குழப்பத்திற்கு முக்கிய காரணம். இதை ரத்து செய்ய வேண்டும். முதுநிலை ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நடைமுறையை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திலும் கடைபிடித்தால் தீர்வு கிடைக்கும்.சிக்கலில் பள்ளிகள்: அரசு சிறுபான்மையினர் பள்ளிகளில் டி.இ.டி., தேர்வு கட்டாயமில்லை என நீதிமன்றம் வலியுறுத்தியும், அதுதொடர்பாக தமிழக அரசு எவ்வித அரசாணையும் பிறப்பிக்காததால் இப்பள்ளிகளில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் நியமனங்களும் குழப்பத்தில் உள்ளன, என்றார்.கல்வித் துறையில் நிலவும் இப்பிரச்னைகளுக்கு அமைச்சர் பெஞ்சமின் சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழக அரசின் சட்டப் பேரவையை எதிர் நோக்கியுள்ள 3100 TET நிபந்தனை ஆசிரியர்கள்....

தமிழக அரசின் சட்டப் பேரவையை எதிர் நோக்கியுள்ள 3100 TET நிபந்தனை ஆசிரியர்கள்....
மாண்புமிகு அம்மாவின் கருணைப் பார்வைக்காகதமிழக அரசின் சட்டப் பேரவையை எதிர் நோக்கியுள்ள 3100 TET நிபந்தனை ஆசிரியர்கள்.எதிர் வரும் தமிழக சட்டப் பேரவைக் கூட்டத்தில் கட்டாயம்  TET நிபந்தனைகளுடன்பணியில் உள்ள  ஆசிரியர்களின் கண்ணீருக்கு நல்ல பதில் கட்டாயம் மாண்புமிகுதமிழக முதல்வரிடமிருந்து  வரும் என்ற எதிர்பார்ப்புடன் சுமார் 3100ஆசிரியர்கள் காத்துக் கொண்டு உள்ளனர்.கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி 23/08/2010 க்குப் பிறகு இடைநிலைமற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிநியமனம் பெற்றவர்கள் கட்டாயம் 15/11/2016 க்குள் ஆசிரியர் தகுதித் தேர்வில்தேர்ச்சி பெற வேண்டும் எனும் நிபந்தனை உள்ளது.கடந்த ஐந்து வருடங்களாக இந்த நிபந்தனைகளுடன் பணி புரிந்து வரும் ஆசிரியர்கள்தமது தகுதியை தாம் கற்பிக்கும் மாணாக்கர்களின் தேர்ச்சி விழுக்காடு மூலமாகநிரூபித்தும் வந்துள்ளனர்.கடந்த மூன்று ஆண்டுகளில் இவர்களுக்கு முறையே வழங்கப்பட வேண்டிய  TETவாய்ப்புகளும் கிடைக்காமல் போயின.தமிழக அரசின் முழு ஒப்புதலின் பேரில் பணி நியமனம் பெற்ற போதும்23/08/2010க்குப் பிறகு பணி நியமனம் பெற்ற இவ்வாசிரியர்கள் தற்போதுபணிப்பாதுகாப்பு இல்லாத சூழலில் மிகுந்த கவலையில் தம் ஆசிரியப் பணிக்காலத்தைக் கடத்தி வருகின்றனர்.வளரூதியம், ஊக்க ஊதியம், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, பணிப்பதிவேடு தொடக்கம்,தகுதியான விடுமுறை, தகுதி காண் பருவம் முடிக்க முடியாமை போன்ற எண்ணற்றபிரட்சனைகளில் ஆங்காங்கே பல ஆசிரியர்கள் சிக்கி உள்ளனர்.ஒரு சில ஆசிரியர்கள் ஊதியம் பெறாமலேயே இன்றுவரை  பணிபுரியும் நிலையும் உள்ளது.இது சமயம் பல வழக்குகளும் நீதி மன்றங்களில் நிலுவைகளில் உள்ளன.இந்த பிரட்சனைகளின் ஒரே தீர்வு  இந்த 3100 அரசு பணியில் உள்ள பட்டதாரிஆசிரியர்களுக்கு TET லிருந்து முழு விலக்கு கொடுப்பது மட்டுமே.இந்த வகை ஆசிரியர்களின் பிரட்சனைகளை பல செய்தி ஊடகங்களும் இணைய ஊடகங்களும்அவ்வப்போது  வெளியிட்டு வருகின்றன.கடந்த டிசம்பர் மாதம் இவ்வகை ஆசிரியர்கள் சுமார் 50 பேர் தமிழக பள்ளிக் கல்விஇயக்குனரிடம் மனு அளித்தனர்.கடந்த ஜனவரி 08,09 ஆம் தேதிகளில் சுமார் 500 க்கும் மேற்பட்ட இந்தநிபந்தனைகளுடன் பணிபுரியும் ஆசிரியர்கள் தமிழக அரசின் நேரடி கவனத்தில் கொண்டுசெல்ல மாண்புமிகு தமிழக முதல்வரின் தனிப் பிரிவில் மனு செய்தனர்.இதன் தொடர்ச்சியாக தமிழக அரசின் உயர் மட்டக் குழுவில் உள்ள மாண்புமிகு முதன்மைஅமைச்சகளுக்கும், மாண்புமிகு தமிழக கல்வித் துறை அமைச்சருக்கும் தனித்தனியேகடிதங்கள் எழுதி மாண்புமிகு தமிழக முதல்வரின் கவனத்தில் கொண்டு செல்லபரிந்துரை செய்யவும் வேண்டினர்.மாண்புமிகு தமிழக முதல்வர் கட்டாயம் இவர்களின் பிரட்சனைகள் தீர ஒருநல்லதீர்வினை எதிர் வரும் தமிழக சட்டப் பேரவையின் கூட்டத்தில் அறிவித்தது இந்த3100 ஆசிரியர்களின் வாழ்வாதாரம் காப்பார் என்ற நம்பிக்கையில் காத்துக் கொண்டுஉள்ளதாக  23/08/2010க்குப் பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள்தெரிவிக்கின்றனர்.இந்த வகை நிபந்தனையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியில்உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் நிலை மாற்றம் பெறுவது மாண்புமிகு தமிழக முதல்வரின்கருணைப் பார்வையில் உருவாகும் ஒர் அரசாணையில் தான் உள்ளது.கல்வி சார்ந்த அறிஞர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இந்த வேண்டுதல்களை முறையாகதமிழக அரசின் மேலான கவனத்தில் கொண்டு சேர்த்து நல்ல தீர்வு காண வேண்டும் எனஇவ்வாசிரியர்கள் தமது கோரிக்கைகளை முன் வைக்கின்றனர்.விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பள்ளிகளில், நீதி போதனை வகுப்பு கட்டாயம்...!!

பள்ளிகளில், நீதி போதனை வகுப்பு கட்டாயம்...!!
பள்ளிகளில், நீதி போதனை வகுப்பு கட்டாயம் நடத்த வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.கோடை விடுமுறைக்கு பின், நாளை மறுதினம் (ஜூன், 1), அரசு பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அதற்கான ஆயத்த பணிகள் குறித்து, பள்ளி கல்வித்துறை, மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.அதில் கூறியிருப்பதாவது:
பள்ளி வளாக தூய்மை, காற்றோட்டத்துடன் சுத்தமான வகுப்பறை, பாதுகாக்கப்பட்ட சுத்தமான குடிநீர், சுகாதாரமான கழிப்பிடங்கள், கருப்பு வண்ணம் பூசப்பட்ட கரும்பலகை இருக்க வேண்டும். வகுப்பறை மின் விசிறி, மின்விளக்குகள் நல்ல நிலையில் இயங்க வேண்டும். பள்ளி மேற்கூரை தூய்மையாக இருக்க வேண்டும்.குடிநீர் தொட்டியை, பிளீச்சிங் பவுடரால் சுத்தப்படுத்தியிருக்க வேண்டும். குழாய்களில் தண்ணீர் வீணாவதை தவிர்க்க வேண்டும். கழிப்பறை பராமரிப்பு சரியாக இருக்க வேண்டும். இதற்கான செலவினத்தை பெற்றோர் ஆசிரியர் கழக நிதி அல்லது பொது நிதியை பயன்படுத்தலாம்.மாணவர் பதிவேடு, முழுமையான விவரங்களுடன் தயாராக இருக்க வேண்டும். ஆசிரியர்களின் பதிவேடு, ஊழியர்கள் பதிவேடு சரியாக இருக்க வேண்டும். ஆசிரியர்களுக்கான கால அட்டவணை,எழுதுபொருட்கள், மாணவர்களுக்கான இலவச புத்தங்களை தயாராக வைத்திருக்க வேண்டும்.மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்; விழிப்புணர்வு ஊர்வலம், துண்டுபிரசுரம் வினியோகிக்க வேண்டும். வீடு வீடாகச் சென்று, அரசு பள்ளியின் தேர்ச்சி, சிறப்பம்சங்களை தெரிவிக்க வேண்டும். பள்ளி திறக்கும் நாளில், அனைத்து குழந்தைகளுக்கும் பாடப்புத்தகங்கள் வழங்க வேண்டும்; முதல் நாளிலேயே, கற்பித்தல் பணியை துவக்க வேண்டும். ஆசிரியர்கள், பள்ளி துவங்குவதற்கு, 30 நிமிடம் முன்னதாக வந்து, பள்ளி சூழலை கண்காணிக்க வேண்டும்.மாணவர் மத்தியில், நற்பண்புகளை விதைக்கும் வகையில், நீதி போதனை வகுப்பு நடத்த வேண்டும்.நல்ல கதைகள், கருத்துகளை கற்பிக்க வேண்டும். மாணவர்களுக்கு வாசிப்புதிறன், கையெழுத்து பயிற்சி, வாசிப்பு பயிற்சி, எழுத்து பயிற்சி அளிக்க வேண்டும். மாணவர்கள் மத்தியில் நூலக வாசிப்பு ஆர்வத்தை தூண்டுவது முக்கியம். தினசரி நாளிதழ்களை வாசிக்கச் செய்ய வேண்டும். மாணவர்களை, மாலை நேரங்களில் விளையாட ஊக்குவிக்க வேண்டும்.எக்காரணம் கொண்டும், வகுப்பறையில் ஆசிரியர் இல்லாத நிலை கூடாது; விடுப்பில் உள்ள ஆசிரியர்களுக்கு பதிலாக, மாற்று ஆசிரியர்கள் வகுப்புக்குச் சென்று கற்பிக்க வேண்டும். பணி நேரத்தில் பள்ளி வளாகத்தை விட்டு வெளியே செல்ல, மாணவர்களை அனு மதிக்கக் கூடாது. தவிர்க்க முடியாத நேரத்தில், தலைமை ஆசிரியர் அனுமதி பெற்று, பதிவேட்டில் பதிவு செய்த பின்பே செல்ல வேண்டும். ஆசிரியர்கள், வகுப்பறையில் மொபைல் போன் பயன்படுத்தக்கூடாது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பி.இ. சேர்க்கை: 2,45,217 பேர் ஆன்லைனில் பதிவு ...

பி.இ. சேர்க்கை: 2,45,217 பேர் ஆன்லைனில் பதிவு ...
அண்ணா பல்கலைக்கழகம், அதன் உறுப்புக் கல்லூரிகளில் பி.இ. படிப்பில் சேருவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை ஞாயிற்றுக்கிழமை வரை 2,45,217 பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.2016-17ஆம் கல்வியாண்டுக்கான பொறியியல் சேர்க்கைக்கு ஆன்-லைன் மூலம் மட்டுமே பதிவு செய்து விண்ணப்பிக்கும் நடைமுறையை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்தது.ஏப்ரல் 15-ஆம் தேதி இதற்கான ஆன்-லைன் பதிவு தொடங்கியது. பி.இ. படிப்பில் சேருவதற்கான விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய செவ்வாய்க்கிழமை (மே 31) கடைசி நாளாகும்.1,76,836 பேர்: ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்த 2,45,217 பேரில், 1,76,836 பேர் கட்டணத்தைச் செலுத்தியுள்ளனர்.பூர்த்தி செய்த விண்ணப்பம் வந்து சேர ஜூன் 4 கடைசி: பூர்த்தி செய்த விண்ணப்பம் சென்னை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர் சேர்க்கை செயலருக்கு வந்து சேர ஜூன்4-ஆம் தேதி கடைசி நாளாகும்.
ஜூன் 20-ஆம் தேதிக்கு மேல் கலந்தாய்வு:
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 20-ஆம் தேதி தொடங்குகிறது. எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு தொடங்கிய சில தினங்களில் பி.இ. பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்கும் நடைமுறை உள்ளது. எனவே, பி.இ. கலந்தாய்வு ஜூன் 20-ஆம் தேதிக்குப் பிறகு தொடங்கும்.விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழ்ப் பல்கலைக்கழகம்:2016ஆம் கல்வி ஆண்டு இளங் கல்வியியல் (B.Ed.) சேர்க்கை (கடைசி நாள்31-05-2016) ....

தமிழ்ப் பல்கலைக்கழகம்:2016ஆம் கல்வி ஆண்டு இளங் கல்வியியல் (B.Ed.) சேர்க்கை (கடைசி நாள்31-05-2016) ....
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஜூன் கடைசி வாரத்தில் 7 வது ஊதியக்குழுவிற்கு அமைச்சரவையில் ஒப்புதல் கிடைக்கும்....!!

ஜூன் கடைசி வாரத்தில் 7 வது ஊதியக்குழுவிற்கு அமைச்சரவையில் ஒப்புதல் கிடைக்கும்....!!
Central government employees can expect to get some good news trickling in from government sources towards the end of June.
As per reports, the Finance Ministry is likely to table the 7th Pay Commission report to the Cabinet for approval in the last week of June.
The 7th pay panel headed by AK Mathur had recommended the minimum salary for central government employees at Rs 18,000 and maximum salary at Rs 2,50,000. As employees protested against the wage hike calling it the "lowest ever" raise, the government set up the Empowered Committee of Secretaries group to review the AK Mathur-panel's recommendations.
The Empowered Committee of Secretaries on the Seventh Central Pay Commission is expected to soon wrap up its report on the remuneration of government employees.
Sources added that even the Prime Minister's Office is keen on a favourable pay hike for the central government employees, so the panel is likely to recommend a minimum salary at Rs 24,000 and the highest salary at Rs 2,70,000.
Sources added that the government is exploring options for meeting the additional payout over and above what was recommended by the 7th pay panel. The payout could be substantial with salary hike and arrears adding up to a Rs 1.02 lakh crore burden on government finances.
Report add that once the report moves from the table of the empowered group of committee to the cabinet, there is no reason why the cabinet would inordinately delay it.
The Finance Ministry is keen that higher salaries reach government employees just before the festive season starting mid-August, as spurt in consumption during the festive period will have a domino effect on the economy.விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Students Bus Pass Regarding Proceeding

Students Bus Pass Regarding Proceeding
பள்ளிக்கல்வி - மாணவர்களுக்கு விலையில்லா பேருந்து பயண அட்டைகள் 2016-2017 - பெற்று வழங்குதல் சார்ந்த வழிகாட்டி நெறிமுறைகள் - இயக்குனர் செயல்முறைகள்விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

விளையாட்டு பல்கலை பணி:15க்குள் விண்ணப்பிக்கலாம்.

விளையாட்டு பல்கலை பணி:15க்குள் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைகளில்,காலியாக உள்ள பணியிடங்களுக்கு, ஜூன், 15க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, பல்கலை பதிவாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: பல்கலைக்கு, தேர்வு கட்டுப்பாட்டாளர் மற்றும் தொலைதுார கல்வி இயக்குனர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு, விண்ணப்பிப்போர், 2016 ஜூலை, 16ன்படி, 45 - 55 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். விண்ணப்பங்களை, www.tnpesu.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, 'பதிவாளர், தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக் கழகம்' என்ற பெயருக்கு, ஜூன், 15க்குள் அனுப்ப வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பைக், செல்லிடப்பேசியுடன் மாணவர்களை பள்ளிக்கு வர அனுமதிக்க வேண்டாம்!:தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்.

பைக், செல்லிடப்பேசியுடன் மாணவர்களை பள்ளிக்கு வர அனுமதிக்க வேண்டாம்!:தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்.
பைக், செல்லிடப்பேசியுடன் மாணவர்கள் பள்ளிக்கு வருவதைத் தலைமை ஆசிரியர்கள் அனுமதிக்கக் கூடாது என பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.ஜூன் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி,பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்புக்கு என உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அறிவுரைகளை மாணவர்கள் பின்பற்றத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் உறுதி செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை சார்பில் இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-16 முதல் 18 வயதுடைய மாணவர்கள் முறையாக ஓட்டுநர் உரிமம் பெறாத நிலையில்,பைக், ஸ்கூட்டர் உள்ளிட்ட இரு சக்கர வாகனங்களை இயக்கக் கூடாது. மீறி வந்தால் வாகனத்தின் சாவியை எடுத்து வைத்து, அந்த மாணவரின் பெற்றோரை நேரில் வரவழைத்து உரிய அறிவுரைக்குப் பின் வாகனத்தின் சாவியை ஒப்படைக்கவேண்டும்.பள்ளிக்கு மாணவர்கள் செல்லிடப்பேசியை எடுத்துவர அனுமதிக்கக் கூடாது.மீறி எடுத்துவரும் மாணவரின் செல்லிடப்பேசியை பறிமுதல் செய்து, அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும்.மாணவர்களின் பாதுகாப்பு குறித்து அதிகப்படியான விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.பேருந்துகள், ஆட்டோ ரிக்ஷாக்களில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கும் கூடுதலாக மாணவர்கள் பயணம் செய்வதை தவிர்த்திட வேண்டும்.வாகனங்களின் மேற்கூரையிலும், படிக்கட்டிலும் பயணம் செய்யக் கூடாது என்பதை எடுத்துரைத்தல் வேண்டும். சாலையில் செல்லும்போதும், சாலையைக் கடக்கும் போதும் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் கைகோர்த்து கூட்டாகச் செல்லக்கூடாது.சாலை பிரிப்பானை குறுக்கே தாண்டிச் செல்லக்கூடாது. பாதசாரிகள் சாலையை கடக்கும் இடத்தில் மட்டுமே சாலையைக் கடக்க வேண்டும்.போக்குவரத்துக் காவலர்களின் சமிக்ஞைகளுக்கு கட்டுப்பட்டு, போக்குவரத்து, சாலை பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடித்தல் வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கட்டுப் பயணத்தில் ஏற்படும் விபத்துகள் பற்றி மாணவர்களுக்கு தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் வேண்டும்.படிக்கட்டு பயணம் செய்யும் மாணவரை அடையாளம் கண்டு, அவருக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும்.அதே மாணவர் மேலும் தொடர்ந்து படிக்கட்டில் பயணம் செய்தால், அவரதுபெற்றோர் அல்லது பாதுகாவலரை அழைத்து உரிய அறிவுரை வழங்கிட வேண்டும். இத்தகைய தவறுகளில் ஈடுபடும் மாணவர்களின் கட்டணமில்லாப் பேருந்துப் பயண அட்டை திரும்பப் பெறப்பட்டு, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாணவர்களுக்கு கண்டிப்புடன் தெரிவித்தல் வேண்டும்.காலை இறைவணக்கக் கூட்டத்தில் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள சாலை பாதுகாப்பு உறுதிமொழியினை எடுக்க அறிவுறுத்த வேண்டும்.விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நல்ல புத்தகங்களை மாணவர்கள் வாசிக்க ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும்:பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் வலியுறுத்தல்

நல்ல புத்தகங்களை மாணவர்கள் வாசிக்க ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும்:பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் வலியுறுத்தல்
பாடப் புத்தகங்களைத் தாண்டி நல்ல புத்தகங்களை வாசிக்க மாணவர்களை ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன் கூறினார்.பள்ளிகள் திறக்கப்பட்ட பின், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கால அட்டவணை ஆகியவை பள்ளி திறக்கப்படும் நாளன்றே கற்றல், கற்பித்தல் பணிகளை ஆசிரியர்கள் தொடங்க வேண்டும். பணிப் பதிவேட்டை முதல் நாளே பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும்.
வாசிப்புப் பயிற்சி, எழுத்துப் பயிற்சி:
பாடக் குறிப்பேடுகள் வாரத்தின் முதல் நாளே தலைமை ஆசிரியர் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும். ஆசிரியர்கள் பள்ளி திறக்கும் நேரத்துக்கு அரை மணி நேரத்துக்கு முன்னதாக வர வேண்டும். நீதிபோதனை வகுப்புகளின்போது வேறு பாடங்களை கற்பிக்கக் கூடாது. மாணவர்களின் திறன்களை அறிந்து வாசிப்புத் திறன், நல்ல கையெழுத்துத் திறன் ஆகியவற்றை வளர்க்கும் வகையில் தினமும் மாணவர்களுக்குவாசிப்புப் பயிற்சி, எழுத்துப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
வாசிப்பை ஊக்குவித்தல்:
ஆசிரியர்கள் பாடப் பொருளை நன்கு புரியும்படி செய்முறை விளக்கங்களோடு கற்பிக்க வேண்டும். நூலகங்களைப் பயன்படுத்த மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும். தினமும் செய்தித்தாள் வாசிக்கும் வழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும். வகுப்பறையில் செல்லிடப்பேசிகளை பயன்படுத்தக் கூடாது.தகுதியுள்ள மாணவர்களுக்கு உதவித் தொகைகளை உரிய நேரத்தில் வழங்க வேண்டும்.மாற்றுத்திறனாளி மாணவர்களின் விவரக் குறிப்புகளைத் தனியாகப் பராமரிக்க வேண்டும். பள்ளிக்குத் தொடர்ச்சியாக வராத மாணவர்களைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஜூலை இரண்டாம் வாரத்தில் சி.பி.எஸ்.இ. சிறப்புதுணைத் தேர்வு.

ஜூலை இரண்டாம் வாரத்தில் சி.பி.எஸ்.இ. சிறப்புதுணைத் தேர்வு.
சி.பி.எஸ்.இ. பிளஸ் 2, பத்தாம் வகுப்புத் தேர்வுகளுக்கான சிறப்பு துணைத் தேர்வுகள் ஜூலை இரண்டாம் வாரத்தில் நடைபெறுகின்றன.இதுகுறித்து சி.பி.எஸ்.இ. தேர்வு நெறியாளர் கே.கே.சௌத்ரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:பள்ளி மாணவர்களின் பட்டியலை பள்ளிகளும், தனித்தேர்வர்களும் தனித்தனியே அனுப்ப வேண்டும். இந்தத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி குறித்த அறிவிப்பு ஜூன் 10-இல் ஜ்ஜ்ஜ்.ஸ்ரீக்ஷள்ங்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளம் வெளியிடப்படும். கூடுதல் விவரங்களுக்கு இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

எம்.பி.பி.எஸ்.:4 நாள்களில் 13,725 விண்ணப்பங்கள் விநியோகம்.

எம்.பி.பி.எஸ்.:4 நாள்களில் 13,725 விண்ணப்பங்கள் விநியோகம்.
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்களை கடந்த 4 நாள்களில் 13,725 மாணவர்கள் பெற்றுள்ளனர்.எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்புகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான விண்ணப்ப விநியோகம் வியாழக்கிழமை (மே 26) தொடங்கியது.சென்னை உள்பட 20 அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் விண்ணப்பத்தைப் பெறலாம்.முதல் நாளில் 6,123 பேரும், வெள்ளிக்கிழமை 6,051 பேரும், சனிக்கிழமை 1,381 பேரும், ஞாயிற்றுக்கிழமை 170 பேரும் என மொத்தம் 13,725 பேர் விண்ணப்பத்தைப் பெற்றுள்ளனர்.
ஆன்லைன் மூலமும்..
இதுதவிர, சுகாதாரத் துறையின் இணையதளம் ஜ்ஜ்ஜ்.ற்ய்ட்ங்ஹப்ற்ட்.ர்ழ்ஞ் மூலமும் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.ஜூன் 6 கடைசி: விண்ணப்பத்தைப் பெற ஜூன் 6-ஆம் தேதி கடைசி நாளாகும். பூர்த்தி செய்த விண்ணப்பம் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அலுவலகத்துக்கு வந்துசேர கடைசி நாள் ஜூன் 7-ஆம் தேதியாகும்.நேரடியாக அளிக்க வசதி: சென்னை, புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்தோர் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை நேரடியாக அளிப்பதற்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்விதேர்வுக் குழு அலுவலக வாயிலில் பெட்டி வைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பி.இ. சேர்க்கை: 2,45,217 பேர் ஆன்லைனில் பதிவு ;விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய நாளை கடைசி.

பி.இ. சேர்க்கை: 2,45,217 பேர் ஆன்லைனில் பதிவு ;விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய நாளை கடைசி.
அண்ணா பல்கலைக்கழகம், அதன் உறுப்புக் கல்லூரிகளில் பி.இ. படிப்பில் சேருவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை ஞாயிற்றுக்கிழமை வரை 2,45,217 பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.2016-17ஆம் கல்வியாண்டுக்கான பொறியியல் சேர்க்கைக்கு ஆன்-லைன் மூலம் மட்டுமே பதிவு செய்து விண்ணப்பிக்கும் நடைமுறையை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்தது.ஏப்ரல் 15-ஆம் தேதி இதற்கான ஆன்-லைன் பதிவு தொடங்கியது. பி.இ. படிப்பில் சேருவதற்கான விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய செவ்வாய்க்கிழமை (மே 31) கடைசி நாளாகும்.1,76,836 பேர்: ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்த 2,45,217 பேரில், 1,76,836 பேர் கட்டணத்தைச் செலுத்தியுள்ளனர்.பூர்த்தி செய்த விண்ணப்பம் வந்து சேர ஜூன் 4 கடைசி: பூர்த்தி செய்த விண்ணப்பம் சென்னை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர் சேர்க்கை செயலருக்கு வந்து சேர ஜூன்4-ஆம் தேதி கடைசி நாளாகும்.
ஜூன் 20-ஆம் தேதிக்கு மேல் கலந்தாய்வு:
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 20-ஆம் தேதி தொடங்குகிறது. எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு தொடங்கிய சில தினங்களில் பி.இ. பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்கும் நடைமுறை உள்ளது. எனவே, பி.இ. கலந்தாய்வு ஜூன் 20-ஆம் தேதிக்குப் பிறகு தொடங்கும்.விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கணினி வழிக் கல்வியில் சிறப்பாகச் செயல்படும் ஆசிரியர்களை தேர்வு செய்ய கல்வித் துறை உத்தரவு.

கணினி வழிக் கல்வியில் சிறப்பாகச் செயல்படும் ஆசிரியர்களை தேர்வு செய்ய கல்வித் துறை உத்தரவு.
அரசுப் பள்ளிகளில் சிறப்பாகப் பணியாற்றும், கணினி வழிக் கல்வியில் ஆர்வமுடன் செயல்படும் ஆசிரியர்களின்பட்டியலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் செவ்வாய்க்கிழமைக்குள் (மே 31) அனுப்ப வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.ஆண்டுதோறும் கணினி வழிக் கல்வியில் சிறப்பாகச் செயல்படும் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு மத்திய கல்வியியல் தொழில்நுட்ப நிறுவனம்சார்பில் நடப்புக் கல்வியாண்டில் கணினி வழிக் கற்றல் திட்டத்தின் கீழ் சிறந்த ஆசிரியர்களுக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது. அதன்படி நிகழ் கல்வியாண்டில் அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் சிறப்பாகச் செயல்படும் தகுதியுடைய கணினி ஆசிரியர்கள்சார்ந்த விவரங்களை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செவ்வாய்க்கிழமைக்குள் (மே 31) அனுப்ப வேண்டும்.எனவே மாவட்ட வாரியாக மூன்று ஆசிரியர்களைத் தேர்வு செய்து, அந்த ஆசிரியர்கள் சார்ந்த விவரங்களை ஏற்கனவே வழங்கப்பட்ட படிவங்களுடன் இணை இயக்குநர்(தொழிற்கல்வி) பெயரிட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.இந்தத் திட்டம் ஆசிரியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதால் முதன்மைக் கல்வி அலுவலர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும். இது குறித்த விவரங்களை www.ciet.nic.in, www.ncert.nic.in  ஆகிய இணையதளங்கள் மூலம் அறியலாம். மாவட்ட தேர்வுக் குழு தலைவர், ஆசிரியர் சார்பான கருத்துகளைப் பரிந்துரைக்கும்போது எந்தவித புகாருக்கும், குற்றச்சாட்டிற்கும், ஒழுங்கு நடவடிக்கைக்கும் உள்படாதவர், நீதிமன்ற வழக்குகளுக்கு உட்படாதவர் என சான்றளிக்கப்பட வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித் துறை சார்பில் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆசிரியர்களுக்கு வாசித்தல் பழக்கம் இல்லை-பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன்.

ஆசிரியர்களுக்கு வாசித்தல் பழக்கம் இல்லை-பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன்.
ஆசிரியர்களுக்கு வாசித்தல் பழக்கம் இல்லாதது கவலைக்குரியது' என, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.கோடை விடுமுறை முடிந்து, ஜூன் 1ல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. புதிய கல்வி ஆண்டில்,ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பது குறித்த வழிமுறைகளை, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், சுற்றறிக்கையாக அனுப்பி உள்ளார்.
அதன் முக்கிய அம்சங்கங்கள்:
பள்ளி திறக்கும் முன்பே வளாகத்தை சுத்தம் செய்து, பராமரித்திருக்க வேண்டும்கடந்த ஆண்டை விட, மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும். குறைவாக மாணவர் உள்ள பகுதிகளில், வீடு வீடாகச் சென்று, கல்வி கற்க வராத மாணவர்களை பள்ளியில் சேர்க்க வேண்டும்ஒவ்வொரு நாளும் என்ன பாடம் எடுக்க வேண்டும் என்பது குறித்த, பாடத்திட்டத்தை வாரத்தின் முதல்நாளே ஆசிரியர்கள் தயார் செய்து, தலைமை ஆசிரியர் பார்வைக்கு அனுப்ப வேண்டும்நீதி போதனை வகுப்புகளை தவறாமல் நடத்த வேண்டும். மாணவர்களுக்கு வாசிப்புத் திறன் மற்றும் எழுத்து பயிற்சியை அதிகரிக்க வேண்டும்ஆசிரியர்களும், தங்கள் வாசித்தல் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்; பல ஆசிரியர்கள், வாசிப்பில் ஆர்வம் காட்டாதது கவலைக்குரியது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு ஐ.டி.ஐ.,க்களில் சேர ஜூன் 20 கடைசி நாள்.

அரசு ஐ.டி.ஐ.,க்களில் சேர ஜூன் 20 கடைசி நாள்.
அரசு தொழிற்பயிற்சி நிலையமான, ஐ.டி.ஐ.,க்களில் சேர, ஜூன் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில்,வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில், ஐ.டி.ஐ.,க்கள் நடத்தப்படுகின்றன. இதில்,பல பொறியியல் சார்ந்த, பொறியியல் அல்லாத தொழில் பிரிவுகளில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.எட்டாம் வகுப்பு, 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றோர், இதில் சேர முடியும். இதற்கு, இணையதளம் வாயிலாகவே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பங்களை, www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, ஜூன் 20ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 'மாவட்டம் வாரியாக கலந்தாய்வு நடத்தப்பட்டு, மாணவர் சேர்க்கை நடத்தப்படும்' என, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது.விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பள்ளியில் நீதி போதனை வகுப்பு நடத்த...உத்தரவு!தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்.

பள்ளியில் நீதி போதனை வகுப்பு நடத்த...உத்தரவு!தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்.
"பள்ளிகளில், நீதி போதனை வகுப்பு கட்டாயம் நடத்த வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.கோடை விடுமுறைக்கு பின், நாளை மறுதினம் (ஜூன், 1), அரசு பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அதற்கான ஆயத்த பணிகள் குறித்து, பள்ளி கல்வித்துறை, மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.அதில் கூறியிருப்பதாவது:பள்ளி வளாக தூய்மை, காற்றோட்டத்துடன் சுத்தமான வகுப்பறை, பாதுகாக்கப்பட்ட சுத்தமான குடிநீர், சுகாதாரமான கழிப்பிடங்கள், கருப்பு வண்ணம் பூசப்பட்ட கரும்பலகை இருக்க வேண்டும். வகுப்பறை மின் விசிறி, மின்விளக்குகள் நல்ல நிலையில் இயங்க வேண்டும். பள்ளி மேற்கூரை தூய்மையாக இருக்க வேண்டும்.குடிநீர் தொட்டியை, பிளீச்சிங் பவுடரால் சுத்தப்படுத்தியிருக்க வேண்டும். குழாய்களில் தண்ணீர் வீணாவதை தவிர்க்க வேண்டும். கழிப்பறை பராமரிப்பு சரியாக இருக்க வேண்டும். இதற்கான செலவினத்தை பெற்றோர் ஆசிரியர் கழக நிதி அல்லது பொது நிதியை பயன்படுத்தலாம்.மாணவர் பதிவேடு, முழுமையான விவரங்களுடன் தயாராக இருக்க வேண்டும். ஆசிரியர்களின் பதிவேடு, ஊழியர்கள் பதிவேடு சரியாக இருக்க வேண்டும். ஆசிரியர்களுக்கான கால அட்டவணை,எழுதுபொருட்கள், மாணவர்களுக்கான இலவச புத்தங்களை தயாராக வைத்திருக்க வேண்டும்.மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்; விழிப்புணர்வு ஊர்வலம், துண்டுபிரசுரம் வினியோகிக்க வேண்டும். வீடு வீடாகச் சென்று, அரசு பள்ளியின் தேர்ச்சி, சிறப்பம்சங்களை தெரிவிக்க வேண்டும். பள்ளி திறக்கும் நாளில், அனைத்து குழந்தைகளுக்கும் பாடப்புத்தகங்கள் வழங்க வேண்டும்; முதல் நாளிலேயே, கற்பித்தல் பணியை துவக்க வேண்டும். ஆசிரியர்கள், பள்ளி துவங்குவதற்கு, 30 நிமிடம் முன்னதாக வந்து, பள்ளி சூழலை கண்காணிக்க வேண்டும்.மாணவர் மத்தியில், நற்பண்புகளை விதைக்கும் வகையில், நீதி போதனை வகுப்பு நடத்த வேண்டும்.நல்ல கதைகள், கருத்துகளை கற்பிக்க வேண்டும். மாணவர்களுக்கு வாசிப்புதிறன், கையெழுத்து பயிற்சி, வாசிப்பு பயிற்சி, எழுத்து பயிற்சி அளிக்க வேண்டும். மாணவர்கள் மத்தியில் நூலக வாசிப்பு ஆர்வத்தை தூண்டுவது முக்கியம். தினசரி நாளிதழ்களை வாசிக்கச் செய்ய வேண்டும். மாணவர்களை, மாலை நேரங்களில் விளையாட ஊக்குவிக்க வேண்டும்.எக்காரணம் கொண்டும், வகுப்பறையில் ஆசிரியர் இல்லாத நிலை கூடாது; விடுப்பில் உள்ள ஆசிரியர்களுக்கு பதிலாக, மாற்று ஆசிரியர்கள் வகுப்புக்குச் சென்று கற்பிக்க வேண்டும். பணி நேரத்தில் பள்ளி வளாகத்தை விட்டு வெளியே செல்ல, மாணவர்களை அனு மதிக்கக் கூடாது. தவிர்க்க முடியாத நேரத்தில், தலைமை ஆசிரியர் அனுமதி பெற்று, பதிவேட்டில் பதிவு செய்த பின்பே செல்ல வேண்டும். ஆசிரியர்கள், வகுப்பறையில் மொபைல் போன் பயன்படுத்தக்கூடாது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

7th Central Pay Commission Report to beput up before Cabinet in June

7th Central Pay Commission Report to beput up before Cabinet in June
7th Pay Commission report to be put up before Cabinet in June – 7th CPC implementation Notification to come at the earliest Central government employees can expect to get some good news trickling in from government sourcestowards the end of June.As per reports, the Finance Ministry is likely to table the 7th Pay Commission report to the Cabinet for approval in the last week of June.
  The 7th pay panel headed by AK Mathur had recommended the minimum salary for central government employees at Rs 18,000 and maximum salary at Rs 2,50,000. As employees protested against the wage hikecalling it the "lowest ever" raise, the government set up the Empowered Committee of Secretaries group to review the AK Mathur-panel's recommendations.The Empowered Committee of Secretaries on the Seventh Central Pay Commission is expected to soon wrap up its report on the remuneration of government employees.Sources added that even the Prime Minister's Office is keen on a favourable pay hike for the central government employees, so the panel is likely to recommend a minimum salary at Rs 24,000 and the highest salary at Rs 2,70,000.Sources added that the government is exploring options for meeting the additional payout over and above what was recommended by the 7th pay panel.
The payout could be substantial with salary hike and arrears adding up to a Rs 1.02 lakh crore burden on government finances.Report add that once the report moves from the table of the empowered group of committee to the cabinet, there is no reason why the cabinet would inordinately delay it.
The Finance Ministry is keen that higher salariesreach government employees just before the festive season starting mid-August, as spurt in consumption during the festive period will have a domino effect on the economy.விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE
Guestbook

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் கல்விச்சோலை இமெயில்களை பெற முடியும்.