உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

Monday, June 17, 2019

கல்லூரியில் சேர பொது நுழைவுத் தேர்வு?

பனிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு கல்லூரிகளில் சேர பொது நுழைவுத் தேர்வை எழுத வேண்டும் என்ற புதிய தேசியக் கல்விக் கொள்கை குழுவின்வரைவு அறிக்கையில் செய்யப்பட்டுள்ள பரிந்துரை அரசின் பரிசீலனையில் உள்ளது. 2019ஆம் ஆண்டிற்கான தேசிய கல்விக் கொள்கை குறித்து திட்டக் குழுவின் வரைவு அறிக்கை பரிசீலனையில் உள்ளது. அதில், பனிரெண்டாம்‌வகுப்பு முடித்த மாணவர்கள் எந்த மேற்படிப்பை தொடர வேண்டுமானாலும் ஒரு பொது நுழைவுத் தேர்வை எழுத வேண்டும் எனபரிந்துரைக்கப்பட்டுள்ளது. புதிய தேசிய வரைவுக் கல்விக்கொள்கையில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் கீழ்வரும் அரசுக் கல்லூரிகளில்எல்லா இளங்கலைப் படிப்புகளிலும் மாணவர்கள் சேர்வதற்குத் தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்ற பரிந்துரைஇடம்பெற்றுள்ளது. அரசுக் கல்லூரிகளில் சேர்வதற்கு பொது நுழைவுத்தேர்வு என்னும் பரிந்துரை ஒருவேளை ஏற்றுக்கொள்ளப்படும்பட்சத்தில், அடுத்த கல்வியாண்டுமுதல் அதற்கான நுழைவுத் தேர்வுமுறை அமல்படுத்தப்படும் என்று தெரிகிறது. அப்படி நடத்தப்படும் நுழைவுத்தேர்வானது, அமெரிக்காவில் உள்ளகல்லூரிகளில் சேர்வதற்கு நடத்தப்படும் எஸ்.ஏ.டி தேர்வுகளுக்கு இணையானதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வு மற்றும் ஐ.ஐ.டி, என்.ஐ.டி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு ஜே.இ.இபோன்ற தேர்வுகளை நடத்திவரும் தேசிய தேர்வு நிறுவனமானஎன்.டி.ஏ அமைப்புதான், இந்தத் தேர்வையும் நடத்தும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நுழைவுத் தேர்வானது, பல்வேறு மொழிகளில் நடத்தப்படும் என்றும், தேர்வுக்குத் தயார்செய்வதற்கான புத்தகங்கள் அனைத்து மொழிகளிலும்வழங்கப்படும் என்றும் கல்விக்கொள்கை தொடர்பான வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பொது நுழைவுத் தேர்வானது மாணவர்களின் வசதிக்கேற்ப ஒரு ஆண்டில் பலமுறை நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மாணவர்களின் திறன் அறிவு, மொழித்திறன் மற்றும் தேர்ந்தெடுக்க உள்ள சிறப்பு பாடப்பிரிவு உள்ளிட்டவைகளின் அடிப்படையில் இந்தத் தேர்வானதுநடத்தப்பட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்களுக்கு ஏற்றவாறு கல்லூரிகளைத் தேர்வு செய்து கொள்ளலாம் எனவும் தேசியக் கல்விக்கொள்கைக் கு‌ழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அறிமுகம் செய்ய மக்களிடம் கருத்து கேட்பதற்கு தேசிய தேர்வு முகமைபரிசீலனை செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பணி நியமன ஆணை வழங்கக் கோரி போராட்டம்

பணி நியமன ஆணை வழங்கக் கோரி சிறப்பு பாடங்களுக்காக தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள், பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசுப் பள்ளிகளில் தையல், இசை, ஓவியம் உள்ளிட்ட சிறப்பு பாடங்களுக்கான ஆசிரியர்களை தேர்வு செய்ய கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தேர்வு நடைபெற்றது. அதன் முடிவுகள் வெளியிடப்பட்டு ஆயிரத்து 80 பேர் கொண்ட தகுதிப் பட்டியலும் வெளியிடப்பட்டது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

புதிய வருமான வரி விதிமுறைகள் இன்று முதல் அமல்

வருமான வரி செலுத்தத் தவறியோர், இனி அபராதம் மட்டுமே செலுத்தி விட்டு தப்ப முடியாத வகையில் வருமான வரி விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியமானது வெள்ளிக்கிழமை இரவில் திருத்தப்பட்ட விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, வெளிநாடுகளில் சட்டவிரோதமாக வங்கிக் கணக்கு வைத்திருப்போரும், சொத்து வைத்திருப்போரும் அதிகாரிகளிடம் சிக்கும் போது, வரியும் அபராதமும் செலுத்தி விட்டு தப்பிக்க முடியாது. கருப்புப் பண ஒழிப்புச் சட்டத்தின் கீழ் இந்த விவகாரத்தில் இனி சமரசத்திற்கு இடமில்லை. புதிய விதிகளின் கீழ் இது கடும் குற்றமாக கருதப்படும். ஆதாயத்தில் இருந்து கழிக்கப்படும் வரி மற்றும் ஆதாயத்தில் இருந்து வசூலிக்கப்படும் வரியை செலுத்த தவறுதல் ஆகியவை சமரசத்திற்கு உகந்தது. இந்த புதிய விதிமுறையானது இன்று முதல் அமலுக்கு வந்தது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மருத்துவ படிப்புகளில் சேர இதுவரை 63 ஆயிரம் பேர் விண்ணப்பம்

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளை படிப்பதற்கு ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். அந்தவகையில் கடந்த 5-ந்தேதி நீட் தேர்வு முடிவு வெளியானது. அதனைத் தொடர்ந்து தமிழக அரசு, மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்தது. அதன்படி, கடந்த 7-ந்தேதி முதல் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். நேற்று இரவு நேர நிலவரப்படி, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கு 63 ஆயிரத்து 126 பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். அரசு கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கு 36 ஆயிரத்து 707 பேரும், சுயநிதி கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கு 26 ஆயிரத்து 419 பேரும் விண்ணப்பித்து இருக்கின்றனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நீட் தேர்வு கேள்வித்தாள்களில் குளறுபடி: தேசிய தேர்வு முகமைக்கு டெல்லி ஐகோர்ட்டு நோட்டீஸ் ஜூலை 4-ந் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

நீட் தேர்வு கேள்வித்தாளில் ஏற்பட்ட குளறுபடி தொடர்பான வழக்கில் தேசிய தேர்வு முகமைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட டெல்லி ஐகோர்ட்டு, வழக்கு விசாரணையை ஜூலை 4-ந் தேதிக்கு ஒத்திவைத்தது. இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி, மாணவர்கள் சேர்க்கைக்கான நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. இதற்கிடையே நீட் தேர்வில் பங்கேற்ற சில மாணவர்கள் தரப்பில், நீட் தேர்வுக்கான வினாத்தாளில் 4 கேள்விகள் பாடத்திட்டத்துக்கு வெளியில் இருந்து கேட்கப்பட்டு இருந்ததாகவும், இதனால் பல மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும், எனவே மறுமதிப்பீடு செய்து கூடுதல் மதிப்பெண்கள் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரி டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு நேற்று டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதி ஜெயந்த் நாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல் வாதாடுகையில், “நீட் தேர்வில் 1, 13, 58, 65 ஆகிய 4 கேள்விகளுக்கு தரப்பட்ட விடை வழிகாட்டியில் தவறு நேர்ந்துள்ளது. இதை சுட்டிக்காட்டி சுமார் 40 ஆயிரம் மாணவர்கள் தேசிய தேர்வு முகமைக்கு விண்ணப்பம் செய்தனர். ஆனால் மீண்டும் தவறு நேர்ந்துள்ளது. எனவே, இந்த தவறுகளை சரி செய்து இவற்றுக்கான மதிப்பெண்களை மறு மதிப்பீடு செய்து தேர்வு முடிவுகளை மாற்றி வெளியிட வேண்டும்” என்று கூறினார். இதைத்தொடர்ந்து தேசிய தேர்வு முகமை தரப்பில் ஆஜரான வக்கீல் வாதாடுகையில், ஏற்கனவே நிபுணர்கள் முறையாக ஆய்வு செய்து தவறுகளை திருத்தி புதிய விடை வழிகாட்டியின் அடிப்படையில் முடிவுகள் வெளியிடப்பட்டதாகவும், எனவே அந்த முடிவை மீண்டும் மாற்ற முடியாது என்றும் கூறினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு தேசிய தேர்வு முகமைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை வருகிற ஜூலை 4-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் சட்ட படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது நாளை வரை நடக்கிறது

டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் சட்ட படிப்புகளுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. நாளை (புதன்கிழமை) வரை இந்த கலந்தாய்வு நடக்கிறது. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் பி.காம்.எல்.எல்.பி. (ஹானர்ஸ்), பி.சி.ஏ.எல்.எல்.பி. (ஹானர்ஸ்), பி.ஏ.எல்.எல்.பி. (ஹானர்ஸ்), பி.பி.ஏ.எல்.எல்.பி. (ஹானர்ஸ்) ஆகிய 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்ட படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. தரவரிசை பட்டியலை தொடர்ந்து கலந்தாய்வு தேதி கடந்த 15-ந்தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, சட்ட படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை டி.ஜி.எஸ். தினகரன் சாலையில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று தொடங்கியது. மொத்தம் 3 நாட்கள் இந்த கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. முதல் நாளான நேற்று பி.காம்.எல்.எல்.பி. (ஹானர்ஸ்), பி.சி.ஏ.எல்.எல்.பி. (ஹானர்ஸ்) ஆகிய படிப்புகளுக்கு கலந்தாய்வு நடந்தது. முதல் நாள் கலந்தாய்வை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து கலந்தாய்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு கல்லூரிகளில் சேருவதற்கான ஆணையையும், சான்றிதழையும் அவர் வழங்கினார். பி.ஏ.எல்.எல்.பி. (ஹானர்ஸ்), பி.பி.ஏ.எல்.எல்.பி. (ஹானர்ஸ்) ஆகிய படிப்புகளுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த 4 பட்டப்படிப்புகளுக்கும் காத்திருப்பு பட்டியலில் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு நாளை (புதன்கிழமை) காலை 10 மணிக்கு கலந்தாய்வு நடக்கிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

குரூப்-1 தேர்வில் தவறான கேள்விகளுக்கு 6 மதிப்பெண்கள் ஐகோர்ட்டில், டி.என்.பி.எஸ்.சி. பதில் மனு

குரூப்-1 தேர்வில் தவறாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தவர்களுக்கு 6 மதிப்பெண்கள் வழங்கி உள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் பதில் மனுதாக்கல் செய்தது. சென்னை ஐகோர்ட்டில், எஸ்.விக்னேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மார்ச் மாதம் குரூப்-1 முதல்நிலை தேர்வை நடத்தியது. இந்த தேர்வை நான் உள்பட தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 68 ஆயிரம் பேர் எழுதினோம். இத்தேர்வுக்கான மாதிரி விடைத்தாள் வெளியிடப்பட்டது. அதில், கேட்கப்பட்டிருந்த 200 கேள்விகளில், 18 கேள்விகளுக்கான விடைகள் தவறாக இருந்தன. இதை சுட்டிக்காட்டி திருத்திய மாதிரி விடைத்தாளை வெளியிட கேட்டோம். ஆனால், அதை ஏற்காமல், டி.என்.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வு முடிவுகளை ஏப்ரல் 3-ந்தேதி வெளியிட்டது. மேலும் முதன்மை தேர்வு ஜூலை மாதம் நடத்தப்படும் என்றும் அறிவித்தது. திருத்திய மாதிரி விடைத்தாளை வெளியிட்டு இருந்தால், 175.5 மதிப்பெண் பெற்ற எனக்கு 190 மதிப்பெண்ணுக்கு மேல் கிடைத்திருக்கும். எனவே முதல்நிலை தேர்வுக்கான திருத்திய மாதிரி விடைத்தாளை வெளியிட உத்தரவிட வேண்டும். அதுவரை முதன்மை தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி வி.பார்த்திபன், “குரூப்-1 தேர்வில் டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் செய்துள்ள குளறுபடியை ஏற்க முடியாது” என்று கண்டனம் தெரிவித்தார். இந்த வழக்கு நீதிபதி வி.பார்த்திபன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் சார்பில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டது. 6 மதிப்பெண்கள் அதில், “மாதிரி விடைத்தாளில் பல கேள்விகளுக்கு தவறான விடைகள் இருந்ததாக 4 ஆயிரத்து 390 விண்ணப்பதாரர்கள் புகார் அளித்தனர். அதன்படி, 3 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்து, இதுகுறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டது. நிபுணர்கள் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில், கேள்விகளுக்கான விடைகளில் தவறு இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனவே தவறான கேள்விகளுக்கு பதில் அளித்த மனுதாரர் உள்ளிட்டோருக்கு கூடுதலாக 6 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. நிபுணர் குழுவின் அறிக்கையை பகிரங்கமாக வெளியிட முடியாது” என்று கூறப்பட்டு இருந்தது. பதில் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை நாளை (புதன்கிழமை) தள்ளிவைத்தார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஏற்கனவே தெரிவித்து இருந்த அறிவிப்பில் மாற்றம்: என்ஜினீயரிங் சிறப்பு பிரிவுக்கு கலந்தாய்வு 25-ந்தேதி தொடக்கம்

என்ஜினீயரிங் சிறப்பு பிரிவினருக்கு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த கலந்தாய்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது என்றும், வருகிற 25-ந்தேதி முதல் அவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்துகிறது. என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கு கடந்த மே மாதம் 31-ந்தேதி வரை மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து கடந்த 3-ந்தேதி ரேண்டம் எண் வெளியிடப்பட்டது. பின்னர், கடந்த 7-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு என்ஜினீயரிங் சேவை மையங்களில் நடந் தது. அதன் தொடர்ச்சியாக 17-ந் தேதி (நேற்று) தரவரிசை பட்டியல் வெளியிடுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதில் சில வேலைப்பாடுகள் இருப்பதால், வருகிற 20-ந்தேதி (நாளை மறுநாள்) தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். தரவரிசை பட்டியல் 20-ந்தேதி வெளியிடப்படுவதால், ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்த சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு தேதியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 25-ந்தேதி மாற்று திறனாளிகளுக்கும், 26-ந்தேதி முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகளுக்கும், 27-ந்தேதி விளையாட்டு வீரர்களுக்கும் நேரடி கலந்தாய்வு சென்னை தரமணியில் உள்ள மைய பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறும். தரவரிசை பட்டியல் வெளியானதும், சிறப்பு பிரிவை சேர்ந்த மாணவர்கள் எந்தெந்த தேதிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்று அவர்களது செல்போனுக்கும், மின்னஞ்சல் முகவரிக்கும் தகவல் அனுப்பப்படும்.

அதேபோல், தொழிற்கல்வி பிரிவினருக்கு 26-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை அதே கல்லூரியில் கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. ஏற்கனவே அறிவித்தது போல், அடுத்த மாதம் (ஜூலை) 3-ந் தேதி பொதுப்பிரிவு கலந்தாய்வு நடைபெறும். அதில் எந்த மாற்றமும் இல்லை. மேலும் சந்தேகங்களுக்கு 044-22351014, 22351015 என்ற எண்ணில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை கேட்டு தெரிந்து கொள்ளலாம். மேற்கண்ட தகவல் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கட்டணமின்றி ஆங்கிலம் கற்பிக்கும் ஆசான்

எப்போது வந்தாலும், எத்தனை பேர் வந்தாலும் சரளமாக ஆங்கிலம் பேசுவதற்காக ‘ஸ்போக்கன் இங்கிலிஷ்’ வகுப்பை இலவசமாக நடத்திவருகிறார் ஆங்கில ஆசிரியர் அந்தோணி. புதுக்கோட்டையைச் சேர்ந்த இவர் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு அலுவலர்கள், வேலைக்கு முயற்சிப்போர் என பலதரப்பட்டவர்களுக்கு கடந்த 21 ஆண்டுகளாக ஆங்கிலம் கற்பித்து சிறந்த வேலைவாய்ப்பு வழிகாட்டியாகத் திகழ்கிறார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பாத்திமாநகரைச் சேர்ந்தவர் அந்தோணி. கிராமப் புறத்தைச் சேர்ந்த பள்ளியில் படிக்கும்போதே ஆங்கிலத்தில் அழகாக எழுதுவது, சரளமாக வாசிக்கும் திறனால் சக மாணவர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

அதே ஆர்வத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுநிலை பட்டம் பெற்று அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.எட். படிப்பையும் முடித்தார். புதுக்கோட்டையில் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியரானார். ஒரு நாள் சுற்றறிக்கை ஒன்றை ஆங்கிலத்தில் தயாரிக்கும் பொறுப்பை பள்ளி நிர்வாகம் அந்தோணிக்கு தந்தது. கடும் முயற்சிக்குப் பிறகு அதை நேர்த்தியாகத் தயாரித்துக் கொடுத்திருக்கிறார். அந்தச் சம்பவமே பாடத்துக்கு அப்பால் யோசிக்க அவரைத் தூண்டியதாகச் சொல்கிறார்.

ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்வில் 2002-ல் வெற்றி பெற்று 7 ஆண்டுகள் ஆசிரியப் பயிற்றுநராகவும், அதன்பிறகு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலை ஆங்கில ஆசிரியராகவும் பணிபுரிந்து வருகிறார்.

“மொழி ஆசிரியர் என்பதால் அனைத்து வகுப்புகளுக்கும் நான் செல்வதுண்டு. அப்போது சம்பிரதாயத்துக்காக எந்த வகுப்புகளையும் நடத்த மாட்டேன். பாட வேளையில் பாடத்திட்டத் தில் உள்ளதை நடத்தியது போக மீதி நேரம் ‘ஸ்போக்கன் இங்கிலிஷ்’தான் நடத்துவேன். எழுத்து, உச்சரிப்பு, வாசிப்பில் சிறப்பு கவனம் செலுத்துவேன். ஆங்கிலத்தைக் கற்றுக் கொண்டால் உலகில் எந்த மூலைக்குச் சென்றாலும் வேலைவாய்ப்பைப் பெற்றுவிடலாம். தாய்மொழியான தமிழ் அவசியம். அதன் வழியே வருமானத்துக்காக ஆங்கிலத்தையும் கற்றுக்கொள்வது அவசியம். இதனால், ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் ஆங்கில இலக்கிய மன்ற விழாவில்கூட மாணவர்களை முழுமையாக ஆங்கிலத்தில் மட்டுமே நிகழ்ச்சிகள் நடத்தச் சொல்கிறேன். சிறப்பு விருந்தினர்களைக்கூட ஆங்கிலத்திலேயே உரை நிகழ்த்த வைப்பேன். மாணவர்களுக்குப் புரியாது என்றாலும் அவரைப்போன்று நாமும் பேச வேண்டும் என்ற எண்ணத்தைத் தோன்றச் செய்யவே அவ்வாறு செய்வது” என்கிறார் அந்தோணி.

தினமும் காலையிலும் மாலையிலும் இவருடைய வீட்டிலேயே இலவச வகுப்புகள் நடைபெறுகின்றன. கோடை விடுமுறை நாட்களில் புதுக்கோட்டையில் எந்த இடத்தில் மண்டபம் குறைந்த வாடகைக்குக் கிடைக்கிறதோ அங்கு ஷிஃப்ட் முறையில் ஆங்கில வகுப்புகளை நடத்துகிறார். இலவச வகுப்பு என்றாலும் இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக விளம்பரம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

“நான் எழுதி பிரசுரித்த Western book, Student’s sparks, Stay positive, Dream big, General knowledge உள்ளிட்டப் புத்தகங்களை மாணவர்களுக்கு இலவசமாக கொடுத்துள்ளேன். ஆனால், ஒருபோதும் ‘இந்தப் புத்தகத்தைப் படித்தால் 60 நாட்களில் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசலாம்’ என்பதுபோன்ற புத்தகங்களை நான் பரிந்துரைப்பதில்லை. அதை வாங்கிப் படித்தாலே ஆங்கிலத்தை தங்குதடையின்ற பேச முடியுமென்றால், இந்நேரம் லட்சக்கணக்கானோர் ஆங்கில வித்தகர்களாகி இருப்பார்களே!

என்னை நாடி வந்தோர் ஆங்கிலத்தை முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும். ஆங்கிலத்தில் புலமையோடு இருப்பவர்கள் யாரும் வேலைவாய்ப்பு இல்லாமல் ஊருக்குள் சுற்றித் திரிவதில்லை. ஆனால், ஆங்கிலம் பட்டம் பெற்றுவிட்டு, அதில் புலமையில்லாததால் வேலை இன்றி தவிப்பவர்கள் பலர். மாணவர்களுக்காக ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வீதம் செலவு செய்து வருகிறேன். கடந்த 21 ஆண்டுகளில் பள்ளி மாணவர்கள் உட்பட 10,000 பேருக்கு வகுப்பு எடுத்துள்ளேன். அதில் நூற்றுக்கணக்கானோர் பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர்” என்கிறார் அந்தோணி.

எல்லாமே வணிகமயமாகப் பார்க்கப்படும் சூழலில் தான் பட்ட கஷ்டத்தைப் பிறர் படக்கூடாது என்பதற்காக ஆங்கிலத்தைக் கற்றுக்கொடுத்து வேலைவாய்ப்புக்கு வழிகாட்டும் அந்தோணி, நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு ஏணியாகச் செயல்படுகிறார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பள்ளிகள் திறந்து 15 நாட்களாகியும் பாடப் புத்தகங்களுக்கு தட்டுப்பாடு குடிநீர், கழிவறைகளில் தண்ணீர் பஞ்சத்தால் மாணவர்கள் பாதிப்பு

பள்ளிகள் திறந்து 15 நாட்களாகியும் இன்னும் பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு முழுமையாக வழங்கப்படவில்லை. மறுபுறம் வெயிலுடன், தண்ணீர் தட்டுப் பாடும் வாட்டுவதால் மாணவர் கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளதாக ஆசிரியர்கள், பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழக பள்ளிக் கல்வியில் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன் படி, 14 ஆண்டுகளுக்கு பின்னர் பாடத்திட்டத்தை மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது. முதல்கட்டமாக 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு கடந்த ஆண்டு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய் யப்பட்டது. தொடர்ந்து, மீதமுள்ள 2, 3, 4, 5, 7, 8, 10, 12 ஆகிய வகுப்புகளுக்கும் நடப்பு ஆண்டு முதல் பாடத்திட்டம் மாற்றப்பட்டது. இதற்கிடையே, கோடை விடுமுறை முடிந்து கடந்த 3-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளி திறக்கும் நாளிலேயே மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. ஆனால், பள்ளிகள் திறந்து 15 நாட்களாகியும் இன்னும் பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு முழுமையாக வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுகுறித்து, அரசுப்பள்ளி தலைமையாசிரியர்கள் கூறும் போது, ‘‘புதிய பாடத்திட்ட மாற்றம் வரவேற்கக்கூடியது. எனினும், அரசு முறையாக திட்டமிடாததால் 60 சதவீத அரசுப்பள்ளிகளுக்கு இன்னும் முழுமையாக புத்தகங்கள் வழங்கப்படவில்லை. குறிப்பாக 3, 4, 5, 8-ம் வகுப்புகளுக்கு ஒரு சில புத்தகங்களே வந்துள்ளன. இதனால் பல பள்ளிகளில் புத்த கங்களை நகல் எடுத்து ஆசிரியர் கள் பாடம் நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. புதிய பாடத் திட்டமும் கடினமாக இருப்பதால் மாணவர்கள் பாடங்களை புரிந்து கொள்ள பெரிதும் சிரமப்படுகின் றனர். இதேபோல், கடந்த ஆண்டும் பிளஸ் 1 வகுப்பில் முக்கிய பாடப்புத்தகங்கள் காலாண்டு வரை தரப்படவில்லை. அதன் விளைவு பொதுத்தேர்வில் அதிக அளவில் மதிப்பெண் பெற்றவர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது. நடப்பு ஆண்டும் அதே தவறை கல்வித்துறை மீண்டும் செய்வது ஏற்புடையதல்ல. எனவே, புதிய பாடப்புத்தகங்களை விரைவாக அச்சிட்டு மாணவர்களுக்கு வழங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என்றனர். இதுகுறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் கூறியது: பாடத்திட்ட மாற்றத்தை 3 கட்டமாக பிரித்து செயல்படுத்த திட்டமிடப்பட்டது. அதன்படி முதல்கட்டமாக கடந்த ஆண்டு 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றப்பட்டது. அதன்பின் நடப்பு கல்வியாண்டில் (2019-20) 2, 7, 10, 12-ம் வகுப்புகளுக்கும் அடுத்த ஆண்டில் (2020-21) 3, 4, 5, 8-ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றப்பட வேண்டும். ஆனால், முன்கூட்டியே பணி கள் முடிந்துவிட்டதால் எஞ்சிய 2, 3, 4, 5, 7, 8, 10, 12 ஆகிய அனைத்து வகுப்புகளுக்கு நடப்பாண்டு பாடத்திட்டத்தை மாற்ற போவதாக திடீரென அறிவித்து அதை அமல்படுத்தியது. இங்குதான் சிக்கல் உருவானது. ஏனெனில், பாடத்திட்ட பணிகள் இறுதிக்கட்ட நிலையில் இருந்த போதுதான் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து, அச்சிடுதல் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டதால் 3, 4, 5, 8-ம் வகுப்புக்கான புத்தகங்கள் முழுமையாக பள்ளிகளுக்கு வந்துசேரவில்லை. சில பள்ளிகளுக்கு ஒன்றிரண்டு புத்தகங்கள் மட்டும் வழங்கப் பட்டுள்ளன. இதேபோல், இந்த ஆண்டு முதல் 9-ம் வகுப்புக்கு முப்பருவ பாட முறையை ரத்து செய்துவிட்டு ஒரே பாடப்புத்தக முறையை அரசு அறிமுகப்படுத்தியது. அறிவியல், சமூக அறிவியல் புத்தகங்களும் சரியாகக் கிடைக்கவில்லை. மேலும் ஒரே பாடப் புத்தகங்கள் என்பதால் அவற்றின் எடை வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது. ஏற்கெனவே உள்ள நோட்டுப் புத்தகங்களுடன் இவற்றையும் சேர்த்து சுமக்க முடியாமல் சுமந்து செல்லும் அவலத்துக்கு மாணவர்கள் ஆளாகியுள்ளனர். மேலும், 6-ம் வகுப்பு சமூக அறிவியல், 7-ம் வகுப்பு அறிவியல் (ஆங்கில மீடியம்) புத்தகங்களும் வழங்கப்படவில்லை. எல்லா புத்தகங்களும் இணையதளத்தில் உள்ளன. நகல் எடுத்து வகுப்புகளை நடத்துங்கள் என்று அதிகாரிகள் சொல்கிறார்கள். அதேநேரம் இணையதளத்திலும் புத்தகங்கள் பதிவேற்றப்படவில்லை. மாணவர் கள் கையில் புத்தகங்கள் இல்லாமல் பாடம் நடத்துவதில் பலனில்லை. வசதியான மாணவர்கள் பிரிண்ட் எடுத்து படிக்கலாம். வசதியற்றவர்கள் நிலை குறித்து சிந்திக்க வேண் டும். இதனால் பள்ளிகள் திறந்தாலும் பெரிதாக ஒரு பயனும் இல்லை. அரசின் முறையான திட்டமிடல் இல்லாததால் இந்த பிரச்சினை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதுதவிர தண்ணீர் தட்டுப்பாடும் மிரட்டுகிறது. வீடுகளில் இருந்து மாணவர்களை குடிநீர் எடுத்து வர சொல்லி விடுகிறோம். ஆனால், கழிப்பறை உட்பட இதர தேவைகளுக்கான தண்ணீருக்கு சிக்கல் நிலவுகிறது. குறிப்பாக வட மாவட்ட பள்ளிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. பல பள்ளிகளில் கழிப்பறைகளை பூட்டி வைப்பதால் மாணவர்கள் திறந்தவெளிகளை பயன்படுத்த வேண்டியுள்ளது. பெற்றோர் ஆசிரியர் கழக நிதியை பயன்படுத்தி தண்ணீர் பிரச்சினையை சரி செய்து கொள்ள அரசு கூறுகிறது. ஆனால், பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் போதுமான நிதி இல்லை. தண்ணீர் பிரச்சினையால் கல்விப்பணியும் பெரிதும் பாதிக்கப்படுகிறது. வெயில் தாக்கமும் அதிகமாக இருப்பதால் இந்த விவகாரத்தில் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கடும் தண்ணீர் தட்டுப்பாட்டால் தாம்பரத்தில் பள்ளிக்கு விடுமுறை

தாம்பரத்தில் உள்ள கிறிஸ்துராஜா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக 6 முதல் 8-ம் வகுப்பு வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. பள்ளிகளிலும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. வெயில் அதிகமாக இருந்ததையும் தண்ணீர் தட்டுப்பாட்டையும் காரணமாகக் கூறி கோடை விடுமுறைக்குப் பின் பள்ளி திறப்பை மேலும் சில நாட்களுக்கு தள்ளிவைக்க கோரிக்கை எழுந்தது. ஆனால் அறிவித்தபடி கடந்த ஜூன் 3-ம் தேதி கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் கிழக்கு தாம்பரத்தில் அரசு நிதிஉதவி பெறும் கிறிஸ்துராஜா பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 6 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவியர் பயின்று வருகின்றனர். தண்ணீர் பற்றாக்குறை காரணமாக இந்த பள்ளியில் உள்ள 6 முதல் 8-ம் வகுப்பு வரை நேற்றும், இன்றும் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பெற்றோர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் துறை யின் அனுமதி பெற்று விடுமுறை விடப் பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். அதிக மழை பெய்தால் பள்ளி விடுமுறை அளிக்கப்படும். இதனிடையே தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளி நிர்வாகத்தினர் கூறியதாவது: வெயில் காரணமாக தண்ணீர் பயன்பாடு அதிகரித்துள்ளது. தண்ணீரை விலை கொடுத்து வாங்குகிறோம். பற்றாக்குறை காரணமாக தண்ணீர் கிடைப்பதில்லை. மேலும் பள்ளியில் கூடுதல் தண்ணீரை இருப்பு வைக்க வசதி இல்லை. இதனால் பள்ளியில் கூடுதலாக தண்ணீரை சேமித்து வைக்க வசதியாக கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இரண்டு தினங்களுக்குள் இந்த பணி முடிந்துவிடும், பின்னர் வழக்கம் போல் பள்ளி செயல்படும் என்றனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அங்கீகாரம் இல்லாத 331 பள்ளிகள்

சென்னை மாவட்ட ஆட்சியர் ஏ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னையில் தடையின்மை சான்று மற்றும் அங்கீகாரம் இல்லாமல் எந்தவொரு பள்ளியும் செயல்படக் கூடாது என அனைத்து பள்ளிகளுக்கும் ஏற்கெனவே அறிவுரை வழங்கப்பட்டது. சென்னை மாவட்டத்தில் 331 பள்ளிகள் தடையின்மைச் சான்று மற்றும் அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வருவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அப்பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க வேண் டாம் என பெற்றோர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். அந்த பள்ளிகள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அசர வைக்கும் துடியலூர் ‘ஹைடெக்’ அரசு மேல்நிலைப் பள்ளி

தனியார் கல்வி நிறுவனங்களுக்கு இணையான உள்கட்டமைப்பு வசதி, பல வண்ணங்களில் மிளிரும் கட்டிடங்கள், ‘ஸ்மார்ட் கிளாஸ்' எனப்படும் சீர்மிகு வகுப்பறைகளில், திறன்மிகு ஆசிரி யர்களின் கற்பித்தலில் ஒளிர்கின்ற னர் மாணவர்கள். ஆம், இவற்றை சாத்தியப்படுத்தியுள்ளது ஓர் அரசு பள்ளி.

கோவை மாவட்டம் துடியலூரை அடுத்துள்ள அசோகபுரத்தில் அமைந்துள்ளது இந்த ‘ஹைடெக்' அரசு மேல்நிலைப் பள்ளி. பெரிய நாயக்கன்பாளையம் ஒன்றியத் துக்கு உட்பட்ட பகுதியில் 1962-ம் ஆண்டு, கோவை மாவட்ட ஆட்சி யராக எஸ்.பி. அம்புரோஸ் பணி யாற்றிய காலத்தில், அப்போதைய முதல்வர் எம்.பக்தவத்சலத்தால் திறந்து வைக்கப்பட்டது இப்பள்ளி.57 வருட கல்விப் பணியில் பல்லாயிரக்கணக்கான மாணவர் களை உருவாக்கி, ஆலமரமாக வளர்ந்து நிற்கும் இப்பள்ளி பல் வேறு புதுமைகளுக்கும், சாதனை களுக்கும் சொந்தமாகியுள்ளது.

இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியை எஸ்.ராஜ லட்சுமி கூறும்போது “தமிழக அரசின் பள்ளி கல்வித் துறை கடந்த 2018-2019-ம் கல்வி ஆண்டில் கோவை மாவட்டத்தின் 'மாதிரி பள்ளி'யாக (மாடல் ஸ்கூல்) எங்கள் பள்ளியை தேர்வு செய்து அறிவித்தது.

அதன் தொடர்ச்சியாக பள்ளியின் வளர்ச்சிப் பணிகளுக்கு ரூ.50 லட் சம் நிதி ஒதுக்கீடு செய்ததில், முதல் கட்டமாக பெற்ற ரூ.30 லட்சம் நிதியில், வகுப்பறைகளின் தரைப் பகுதியில் கிரானைட் பதித்தல், நூலகம் அமைத்தல், மழலையர் வகுப்புக்கு உபகரணங்கள் வாங்கு தல், குழந்தைகளுக்கு விளையாட் டுப் பொருட்கள் வாங்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

ஒரு தனியார் நிறுவனம் எங்கள் பள்ளியை தத்தெடுத்து பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை ஏற் படுத்திக் கொடுத்துள்ளது.இப்பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை 1,500 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்களால் இந்த ஆண்டு பொதுத் தேர்வில் 10-ம் வகுப்பில் 208 பேரில் 194 பேரும், பிளஸ் 1 வகுப்பில் 239 பேரில் 232 பேரும், பிளஸ் 2 வகுப்பில் 270 பேரில் 262 பேரும் தேர்ச்சி பெற்றனர். 480 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்ற 34 பிளஸ் 2 மாணவர்களின் கல்விச் செலவை மற்றொரு தனியார் நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது. 'நீட்' உள்ளிட்ட போட்டித் தேர்வு களுக்கும் மாணவர்கள் தயார்படுத் தப்பட்டு வருகின்றனர்” என்றார்.

பள்ளி வளாகத்தில் காய்கறி தோட்டங்கள், குடிநீர் தொட்டிகள், பிளாஸ்டிக் குப்பை போடுவதற்கு நீலநிற குப்பைத் தொட்டி, காகிதம் போன்ற குப்பை போடுவதற்கு பச்சை நிற குப்பைத் தொட்டி அமைத்து வளாகத்தில் சிறு காகிதத் துண்டைகூட பார்க்க முடியாத அள வுக்கு தூய்மைப் பள்ளி'யாகவும் மாறியுள்ளது, இப்பள்ளி.

“அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் தொடங்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இப்பள்ளியில் மழலையர் வகுப்பு கடந்த ஜூன் 3-ம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. 40 குழந் தைகள் சேர்ந்துள்ளனர். மழலையர் வகுப்புக்கு அமைக்கப்பட்டுள்ள 'ஸ்மார்ட் வகுப்பறை'யில் அமர் வதற்கு பலவண்ண குட்டி நாற் காலிகள், வட்டமான மேஜைகள், குழந்தை பாடல் ஒலிபரப்பு, வகுப் பறை சுவற்றில் வெளிநாட்டு மாதிரியைக் கொண்டு ஓவியங் கள், விரிப்புகள் போன்றவை குழந்தைகளை வெகுவாகக் கவர்ந்துள்ளன. மழலையர் வகுப்பு ஆசிரியர் இன்னும் நியமிக்கப்படாத நிலையில், சுழற்சி முறையில் இப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களே குழந்தைகளை கவனித்துக் கொள்கிறோம்” என் கின்றனர், இப்பள்ளி ஆசிரியர் கள். கோவையில் மழலையர் வகுப்பில் இவ்வளவு குழந்தை கள் சேர்ந்துள்ளதும், இப்பள்ளி யில்தான் என்பது குறிப்பிடத் தக்கது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, June 16, 2019

இந்திய அழகி போட்டி | மும்பையில் நடந்த கண்கவர் போட்டியில் இந்திய அழகியாக சுமன்ராவ் தேர்வு 20 வயது கல்லூரி மாணவி

மும்பையில் நடந்த கண்கவர் போட்டியில் இந்திய அழகியாக ராஜஸ்தானைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி சுமன்ராவ் தேர்வு செய்யப்பட்டார். மும்பையில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் உள்விளையாட்டு அரங்கில் 2019-ம் ஆண்டுக்கான இந்திய அழகி போட்டி நேற்று முன்தினம் இரவு கோலாகலமாக நடந்தது. இந்த போட்டியில் நாட்டின் பல மாநிலங்களை சேர்ந்த அழகிகளும் கலந்து கொண்டு போட்டிக்கு மெருகேற்றினர். இதில் நடுவர்களாக இந்தி பட உலகின் நடன இயக்குனர் ரெமோ டி சூசா, நடிகைகள் ஹூமா குரேஷி, சித்ரங்கதா சிங், ஆடை வடிவமைப்பு கலைஞர் பால்குனி ஷானே பிகாக்கா, இந்திய கால்பந்து வீரர் சுனில் சேத்ரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி சுமன் ராவ் இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு கடந்த ஆண்டின் இந்திய அழகியான சென்னை அழகி அனுகீர்த்தி வாஸ் கிரீடம் சூட்டினார். அப்போது மொத்த அரங்கமும் கரவொலி எழுப்பியது. சத்தீஷ்காரை சேர்ந்த ஷிவானி ஜாதவ் ‘மிஸ் கிராண்ட்’ இந்தியா பட்டத்தையும், பீகாரின் ஸ்ரேயா சங்கர் ‘மிஸ் இந்தியா யுனைட்டெட் காண்டினன்ட்ஸ்’ பட்டத்தையும் பெற்றனர். சுமன்ராவ், இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 7-ந் தேதி, தாய்லாந்து நாட்டின் பட்டயா நகரில் நடக்க உள்ள ‘மிஸ் வேர்ல்ட்’ உலக அழகி போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொள்கிறார். சுமன்ராவ் பிறந்தது ராஜஸ்தான் என்றாலும் தன் வாழ்வின் பெரும்பகுதியை மும்பையில் கழித்துள்ளார். தற்போது டெல்லி கல்லூரியில் பி.காம். பட்ட படிப்புடன், ஆடிட்டர் பயிற்சியும் பெற்று வருகிறார். மாடல் அழகியாகவும் உள்ளார். கதக் நடனத்திலும் ஆர்வம் கொண்டுள்ளார். இந்திய அழகி போட்டியின்போது, நடிகைகள் கத்ரினா கைப், நடிகர் விக்கி கவுஷால், நடிகை மவுனி ராய் உள்ளிட்டோரின் நடனம், பார்வையாளர்களுக்கு விருந்தாக அமைந்தது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

60 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்: கற்பித்தல் திறனை பாதிக்கும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு

60 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் விகிதாசாரத்தை அமல்படுத்துவது கற்பித்தல், கற்றல் திறனை பாதிக்கும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ள ஆசிரியர்- மாணவர் விகிதாசாரம் 1 ஆசிரியர் 60 மாணவர்கள் என 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு அறிவித்திருப்பது மாணவர்களின் கல்வியை பெரிதும் பாதிக்கும். தற்போது புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அதனை மாணவர்களுக்கு எடுத்து செல்வதில் ஆசிரியர்களுக்கு மிகுந்த சிரமம் ஒருபுறம் இருந்தாலும் கற்கும் மாணவர்களுக்கு வகுப்பறைச்சூழல் கூட்டத்தில் பங்கேற்பது போன்று தோன்றும். மேலும், ஆசிரியர்- மாணவர் விகிதாசாரம் தொடக்க வகுப்புகளுக்கு (1 முதல் 5) ஒரு ஆசிரியர் 30 மாணவர்கள் என்றும், நடுநிலை வகுப்புகளுக்கு (6 முதல் 8) ஒரு ஆசிரியர் 35 மாணவர்கள் என்றும் உயர் வகுப்புகளுக்கு (8 முதல் 10) ஒரு ஆசிரியர் 40 என்றும், மேல்நிலை வகுப்புகளுக்கு (11 முதல் 12) ஒரு ஆசிரியர் 60 மாணவர்கள் என்றும் அறிவித்திருப்பது கற்பித்தல்-கற்றல் பணி பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும். ஒரு வகுப்பறையில் 60 மாணவர்கள் என்பது இடநெருக்கடி மட்டுமின்றி மாணவர்களுக்கு ஆரோக்கியமான சூழலில்லாமல் ஒருவிதமான இறுக்கம் ஏற்படும். மேலும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தும். இஷ்டபட்டு செய்யும் கற்பித்தல்- கற்றல் கஷ்டபட்டு நடக்கும். தமிழ்நாடு அரசின் பாடத்திட்டம் சிறப்பாக அமைத்துவிட்டு அதனை எடுத்துச்செல்லும் வழி சரியாக அமைந்திடாவிட்டால் பயனற்றுப்போகும். முக்கியமாக போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் இருக்கும் பாடங்களை எளிமையாக எடுத்துச்செல்ல மாணவர்கள்-ஆசிரியர் விகிதம் குறைத்தால் மட்டுமே சிறப்பு பெறும். எனவே மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர் விகிதாசாரத்தை குறைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் முறைகேடு வைகோ குற்றச்சாட்டு

மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடந்துள்ளதாக வைகோ குற்றம்சாட்டியுள்ளார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மதுரை காம ராஜர் பல்கலைக்கழகத்தில், பல்வேறு முதுநிலைப் பட்டப்படிப்புகளுக்கு மோசடியாக நடந்த மாணவர் சேர்க்கையினால், தகுதியுள்ள பல மாணவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. தகுதியில்லாத பலர் சேர்ந்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள மற்ற பல்கலைக்கழகங்கள், நுழைவுத் தேர்வில் 50 மதிப்பெண்கள், இளநிலை பட்டப்படிப்பில் 50 மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு மட்டுமே இடம் என்ற அளவில் சேர்க்கை நடத்துகையில், மதுரை காமராஜர் பல் கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை அனைத்தும் மூடு மந்திரமாகவே நடத்தி முடிக்கப்பட்டு இருக்கின்றது. இந்த விவரங்கள் எதுவும் தெரியாத மாணவர்கள் பலர், இன்னமும் பல்கலைக் கழகத்தின் வலைத்தளத்தையே பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில், மாணவர் சேர்க்கையில் தாங்கள் செய்த தவறுகளையும், முறைகேடுகளையும் மறைப்பதற்காக, மதுரை காமராஜர் பல்கலைக்கழக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டு இருந்த மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்புகள், நுழைவுச் சீட்டு அறிவிப்புகள் அனைத்தையும் திடீரென நீக்கிவிட்டனர். இது மாணவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. எனவே, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 2019-2020-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கையில் நடைபெற்றுள்ள மாபெரும் மோசடி குறித்து தக்க விசாரணை நடத்த வேண்டும். முறைகேடான மாணவர் சேர்க்கையை ரத்து செய்ய வேண்டும். தகுதியுடைய மாணவர்களுக்கு முதுநிலை பட்டப்படிப்புகளில் இடம் கிடைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முறைகேடு செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகின்றேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தேர்ச்சி பெற்றால்தான் டாக்டராக பணியாற்ற முடியும்  அடுத்த ஆண்டுமுதல் அமல்படுத்துகிறது மத்திய அரசு 

எம்பிபிஎஸ் முடித்தவர்களுக்கு புதிய தகுதித் தேர்வை அடுத்த ஆண்டு முதல் மத்திய அரசு அமல் படுத்த உள்ளது. இந்தியாவில் இளநிலை மருத் துவப் பட்டப்படிப்பான எம்பிபிஎஸ் ஐந்தரை ஆண்டுகள் கொண்டது. கல்லூரியில் நான்கரை ஆண்டுகள் படித்த பின்னர், ஓராண்டு பயிற்சி டாக்டராக பணியாற்றுகின்றனர். இதையடுத்து, மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்து டாக்டராக பணியாற்றுகின்றனர். இந்நிலையில், எம்பிபிஎஸ் முடித்த வர்கள் National Exit Test (NEXT) என்ற ‘நெக்ஸ்ட்’ தகுதித் தேர்வை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு இந்த தேர்வை கொண்டு வர முயற்சி செய்த போது, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. அதனால், அப்போது இந்த தேர்வை மத்திய அரசால் கொண்டுவர முடியவில்லை. தற்போது வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்த தேர்வுக்கான மசோதா நிறைவேற்றப்பட உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்கத்தின் செயலாளர் டாக்டர் கதிர்வேல், அரசு சாரா சேவை மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் கார்த்திகேயன் ஆகியோர் கூறிய தாவது: எம்பிபிஎஸ் முடித்தவர் களுக்கு நெக்ஸ்ட் தேர்வை இந்த ஆண்டு மத்திய அரசு கொண்டுவர உள்ளது. இந்த ஆண்டு எம்பிபிஎஸ் முடித்தவர்கள் நீட் தேர்வு எழுதி மருத்துவப் பட்டமேற்படிப்புகளில் சேர்ந்துவிட்டதால், அடுத்த ஆண்டு முதல் தான் இந்த தேர்வு நடை முறைப்படுத்தப்படும். அதேநேரத்தில் எம்பிபிஎஸ் முடித்தவர்களுக்கு நெக்ஸ்ட் தேர்வு கட்டாயமாக்கப்படுவதால், மருத்துவப் பட்டமேற்படிப்பு களுக்கு அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு இருக்குமா? இல்லையா? அல்லது நெக்ஸ்ட் தேர்வின் மதிப் பெண் நீட் தேர்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுமா என்பது இன்னும் தெளிவாக அறிவிக்கவில்லை. நெக்ஸ்ட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான், மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்து டாக்டராக பணி யாற்ற முடியும். 2017-ம் ஆண்டு இந்த தேர்வை மத்திய அரசு கொண்டுவர முயற்சி செய்த போது நெக்ஸ்ட் தேர்வு, எக்ஸிட் தேர்வு என்று சொல்லப்பட்டது. தற் போது அதே பெயரில் கொண்டு வரப்படுகிறதா அல்லது வேறு பெயர் வைக்கப்படுமா என்று தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். வெளிநாடுகளில் மருத்துவம் இந்தியாவில் எம்பிபிஎஸ் படிப் பவர்களுக்கு மட்டுமின்றி, வெளி நாடுகளில் மருத்துவம் படித்துவிட்டு இந்தியா வருபவர்களுக்கு எக்ஸிட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுபற்றி லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் நிறுவனத்தின் இயக் குநர் முகமது கனியிடம் கேட்ட போது, “பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளில் மருத் துவம் படித்துவிட்டு இந்தியா வருப வர்கள் இந்திய மருத்துவக் கவுன் சில் நடத்தும் எப்எம்ஜிஇ (FMGE) என்ற தகுதித் தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். அதன் பின்னரே, மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்து டாக்டராக பணியாற்ற முடியும். பின்னர், நீட் தேர்வு எழுதி மருத்துவப் பட்டமேற்படிப்புகள் படிக்க முடியும் என்ற நடைமுறை உள்ளது. நெக்ஸ்ட் தேர்வு நடைமுறைப்படுத்தப்படுவதால், வெளிநாடுகளில் மருத்துவம் படித்துவிட்டு வருபவர்கள் இனிமேல் எப்எம்ஜிஇ தேர்வை எழுதத் தேவையில்லை. நெக்ஸ்ட் தேர்வை மட்டும் எழுதி தேர்ச்சி பெற வேண்டும்” என்றார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பொறியியல் மாணவர் சேர்க்கை தர வரிசைப் பட்டியல், வரும் 20-ம் தேதி வெளியிடப்படும்.

பொறியியல் மாணவர் சேர்க்கை தர வரிசைப் பட்டியல், வரும் 20-ம் தேதி வெளியிடப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார். தருமபுரியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதா வது: கடந்த மே 2-ம் தேதி பொறி யியல் சேர்க்கைக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கும் பணி தொடங்கியது. மே 31-ம் தேதி வரை இப்பணிகள் நடந்தன. இதற் கான சம வாய்ப்பு எண் (ரேண்டம் எண்) ஜூன் 3-ம் தேதி வெளி யிடப்பட்டது. தொடர்ந்து, தமிழகத் தில் உள்ள 46 சேவை மையங்கள் மூலம் ஜூன் 7 முதல் 13-ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழக பொறியியல் சேர்க்கைக்கு 1 லட்சத்து 33 ஆயிரத்து 166 பேர் பதிவு செய்திருந்தனர். இதில், 1 லட்சத்து 4 ஆயிரத்து 418 பேர் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றனர். இது, 78.4 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு பொறியியல் சேர்க்கைக்கு 1 லட்சத்து 59 ஆயிரம் பேர் பதிவு செய்து, 98 ஆயிரம் பேர் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றனர். இது 61.6 சதவீதம் ஆகும். நடப்பு கல்வியாண்டுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நிறைவு பெற்ற நிலையில், வரும் 17-ம் தேதி தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட இருந்தது. இந்நிலையில், மாணவர்களின் நலன் கருதி தர வரிசைப் பட்டியல் வெளியிடுவது 20-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பின்போது சில மாணவர்களால் சில சான்றிதழ்களை உடனடியாக சமர்ப்பிக்க இயலாத சூழல் நிலவியதாக தெரியவந்தது. இதுபோன்ற சிறு சிறு பிரச்சினைகளில் இருந்தவர்கள் பெயரும் தர வரிசைப் பட்டியலில் தவறாமல் இடம்பெற வேண்டும் என்ற நோக்கத்துக்காக இந்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தர வரிசைப் பட்டியல் வெளியாவதற்கு முந்தைய நாள் வரை மாணவர்கள் மீண்டும் சேவை மையங்களை அணுகி அளிக்க வேண்டிய விவரங்களை நிறைவு செய்து கொள்ளலாம். ஜூன் 20-ம் தேதி வெளியாக உள்ள தரவரிசைப் பட்டியலை அன்று முதல் 4 நாட்களுக்கு இணைய தளத்தில் பார்வையிட முடியும். இந்த பட்டியலில் தவறு நேர்ந்திருந்தாலும், சந்தேகங்கள் ஏற்பட்டாலும் சென்னையில் இயங்கும் தொலைபேசி எண் களான 044-22351014 மற்றும் 22351015 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக் கலாம். தமிழக பொறியி யல் சேர்க்கைக்கு விண்ணப்பித் துள்ள மாணவர்கள் இந்த வாய்ப்புகளை முறையாக பயன் படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வேலைதேடும் இளைஞர்களுக்கு  வேலைவாய்ப்பு ஆலோசனை வழங்க சென்னையில் சிறப்பு வழிகாட்டு மையம் மாநில வேலைவாய்ப்பு பயிற்சித் துறை ஆணையர் தகவல்

வேலைதேடும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் தொழில் தொடர்பான ஆலோச னைகள் வழங்க சென்னையில் சிறப்பு வழிகாட்டு மையம் இயங்கி வருவதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் பா.ஜோதி நிர்மலா சாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- வேலை தேடும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தொடர்பான தகவல்களை வழங்கி உதவி செய்வததற்காக தமிழக அரசால் மாநில தொழில்நெறி வழிகாட்டு மையம் சென்னை கிண்டியில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப் பட்டது. இளைஞர்களுக்கு உளவியல் தேர்வு, போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்துவது, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த ஆலோசனைகள் வழங்குவது போன்றவை இம்மையத்தின் தலையாய பணிகள் ஆகும். மேலும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திறன் மேம்பாடு, சுயதொழில் தொடங்கும் வகையில் தொழில்முனைவோர் திறனை ஊக்குவித்தல், வேலையளிப்போர், வேலை தேடுவோர் சந்திப்பு, வேலைவாய்ப்பு முகாம்கள் மற்றும் பயிற்சி வகுப்புகள் தொடர்பாக எஸ்எம்எம் மூலம் தகவல் அனுப்புதல் போன்ற பணிகளையும் இம்மையம் செய்து வருகிறது. இந்த மையத் தில் உள்ள உளவியல் ஆலோசகர்கள் திறன் மதிப்பீடு, உளவியல் தேர்வு நடத்தி இளைஞர் களின் அறிவுத்திறன், ஆர்வம் ஆகியவற்றை கண்டறிந்து அதற்கேற்ப தொழில் மற்றும் மேற்படிப்புக்கும் வழிகாட்டுவார்கள். மேலும், இங்கு மத்திய-மாநில அரசுகளின் போட்டித்தேர்வு களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகளும், மாதிரித்தேர்வுகளும் மாதிரி நேர்காணல்களும் நடத்தப்படுகின்றன. இந்த மையம் கீழ்க்காணும் முகவரியில் செயல்பட்டு வருகிறது. மாநில தொழில்நெறி வழிகாட்டு மையம், ஏ-28, முதல் மாடி, டான்சி தலைமை அலுவலகம், திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை 600 032. தொலைபேசி எண்கள்: 044-22500134, 29530134. மின்னஞ்சல் முகவரி: statecareercentre@gmail.com இந்த மையம் அனைத்து அரசு வேலை நாட்களிலும் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை செயல்படும். வேலை தேடும் இளைஞர்கள் இந்த சிறப்பு வழிகாட்டு மையத்தில் வழங்கப்படும் சேவைகளை நன்கு பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத் தப்படுகிறார்கள். இவ்வாறு ஜோதி நிர்மலா சாமி கூறியுள்ளார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி

செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை சார்பில் சென்னையில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக பி.டி.லீ.செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையின் சிறப்பு பயிற்சி மையத்தின் கவுரவ இயக்குநரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான எஸ்.எஸ்.ஜவஹர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள இத்தேர்வு மூலம் 6,491 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. குரூப்-4 தேர்வுக்கு செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை சிறப்பு பயிற்சி மையத்தின் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. 23-ம் தேதி அறிமுக வகுப்பு இதுதொடர்பான இலவச அறிமுக வகுப்பு வேப்பேரி ஈவிகே சம்பத் சாலையில் உள்ள பி.டி.லீ.செங்கல்வராய நாயக்கர் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் வரும் 23-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடைபெறும். இதில் கலந்துகொள்ள விரும்புவோர் 86680-38347 என்ற செல்போன் எண்ணில் தொடர்புகொண்டு பெயரை முன்பதிவு செய்ய வேண்டும். அரசு வேலைகளுக்கான தேர்வுகளை எழுதும் மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். நிகழ்ச்சி நடைபெறும் ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.30 மணிக்குள் நேரில் வந்தும் பெயரை பதிவுசெய்துகொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு ஜூன் 19 வரை விண்ணப்பிக்கலாம்

அரசு, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரி யர் விருதுக்கு விண்ணப்பிக்க ஜூன் 19-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆண்டுதோறும் செப்டம்பர் 5-ம் தேதி முன் னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை முன்னிட்டு சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து நல்லாசிரியர் விருது வழங்கி வருகிறது. அதன்படி 2018-ம் ஆண்டுக்கான நல்லாசிரியர் விருதுக்கு தகுதியான ஆசிரியர் கள் ஜூன் 15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மனிதவள மேம்பாட்டு அமைச்ச கம் அறிவிப்பு வெளியிட்டி ருந்தது. இதையடுத்து நாடு முழுவதும் பெரும்பாலான ஆசிரியர்கள் ஆர்வத்துடன் இணையதளம் வழியாக விண்ணப்பித்து வரு கின்றனர். இந்நிலையில் விண் ணப்பத்துக்கான கால அவ காசத்தை ஜூன் 19-ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அதி காரிகளுக்கு அனுப்பிய சுற்ற றிக்கை: தேசிய நல்லாசிரியர் விரு துக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் ஜூன் 19-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே, தகுதியான அரசு மற்றும் அரசு உதவி பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஜூன் 19-ம் தேதிக்குள் www.mhrd.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் ஆசிரியர் கள் கடந்த ஏப்ரல் 30-ம் தேதி வரை பணியாற்றிருக்க வேண்டும். ஓய்வு பெற்றவர்கள் மற்றும் கல்வி அலுவலகங்களில் நிர்வாக பணிகளில் ஈடுபட் டுள்ள ஆசிரியர்கள் விண்ணப் பிக்கக்கூடாது. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும் இதுதொடர்பான வழிகாட்டுதல்களை தலைமை யாசிரியர்களுக்கு உடனே வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் நீட் தேர்வு, கல்விக் கடன்களை ரத்து செய்ய வேண்டும் டி.ஆர்.பாலு எம்.பி. வலியுறுத்தல்

நீட் தேர்வு, கல்விக் கடன்களை ரத்து செய்ய வேண்டும். மத்தியில் தமிழையும் ஆட்சிமொழி ஆக்க வேண்டும் என்று டெல்லியில் நேற்று நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் திமுக சார்பில் அக்கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. பங்கேற்றார். கூட்டத்தில் அவர் முன்வைத்த கோரிக்கைகள் விவரம்: நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2017 பிப்ரவரி 18-ம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். தமிழ் ஆட்சி மொழி இந்தி போல தமிழையும் மத்தியில் ஆட்சிமொழி ஆக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தமிழையும் அலுவல் மொழியாகப் பயன்படுத்த வேண்டும். தமிழகத்தில் நிலவும் குடிநீர் பஞ்சத்தைப் போக்க மத்திய அரசு நிதி உதவியுடன் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். தமிழக மாணவர்களின் கல்விக் கடன்களை ரத்து செய்ய வேண்டும். மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை உடனே நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண் டும். குறுவை சாகுபடிக்காக தமிழகத்துக்கு 9.19 டிஎம்சி தண்ணீர் திறக்குமாறு காவிரி மேலாண்மை வாரியம் அளித்த தீர்ப்பை செயல்படுத்த கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் தரவேண்டும். காவிரியின் குறுக்கே மேகே தாட்டுவில் கர்நாடகா அணை கட்டு வதை தடுத்து நிறுத்த வேண்டும். விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும். மத்திய அரசு வங்கிகளில் தமிழக விவசாயிகள் பெற்ற விவசாயக் கடன்களை ரத்து செய்ய வேண் டும். இவ்வாறு டி.ஆர்.பாலு தெரி வித்துள்ளார்.தமிழகத்தில் நிலவும் குடிநீர் பஞ்சத்தைப் போக்க மத்திய அரசு நிதி உதவியுடன் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். தமிழக மாணவர்களின் கல்விக் கடன்களை ரத்து செய்ய வேண்டும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு பள்ளி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பில் சலுகை வழங்க இயலாது - அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் இருமொழி கொள்கை என்பதால் அரசு பள்ளி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பில் சலுகை வழங்க இயலாது’ என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்று, மாணவர்களுக்கு லேப்டாப்களை வழங்கினார். முன்னதாக அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி:புதிய பாடதிட்டம், மத்திய அரசு கொண்டுவரும் அனைத்து தேர்வுக்கும் விடை அளிக்கும் வகையில் உள்ளது. கடந்தஆண்டு 210 நாட்கள் பள்ளி நடத்த உத்தரவிடப்பட்டது. ஆனால், காலநிலை மாற்றத்தால் 192 நாட்கள் மட்டுமே பள்ளி திறக்கப்பட்டது. ஆசிரியர் தேர்வில் இருந்த வெயிட்டேஜ் முறை நீக்கப்பட்டாலும் அவர்கள் மறுதேர்வு எழுத வேண்டும். தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 7,500 பேர் அதிகமாக உள்ளனர். அவர்களை மற்ற பள்ளிகளுக்கு மாற்ற ஆசிரியர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு என தனியாக வேலை வாய்ப்பு, உயர்கல்விக்கான நுழைவுத்தேர்வில் சலுகை வழங்க முடியாது.அதேபோன்று தமிழகத்தில் இருமொழி கொள்கை என்பதால் அரசு பள்ளி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பில் சலுகை வழங்க முடியாது. ஸ்மார்ட் கார்டை மாணவர்கள் பஸ் பயணத்திற்கு பயன்படுத்துவது குறித்து, முதலமைச்சரிடம் கலந்தாேலாசித்து நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிக்கு நன்கொடை வழங்கும் தனி நபர்களுக்கு வரிவிலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் அனைத்து வகுப்புகளுக்கும் பயோமெட்ரிக் வருகைப்பதிவு கொண்டு வரப்படும். ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. விடைத்தாள் திருத்தும் பணியில் கவனக்குறைவாக இருந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 17.06.19

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 17.06.19
திருக்குறள்
அதிகாரம்:ஒப்புரவறிதல்
திருக்குறள்:218
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.
விளக்கம்:
செய்யவேண்டிய கடமையை அறிந்த அறிவாளிகள், தம்மிடம் கொடுக்க இடம் இல்லாக் காலத்திலும், உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவத் தயங்க மாட்டார்கள்.

பழமொழி
Call a spade a spade
உள்ளதை உள்ளவாறு சொல்

இரண்டொழுக்க பண்புகள்
1. பொது போக்குவரத்தில் பயணிக்கும் போது வயதானவர்கள் அல்லது முடியாதவர்கள் நின்று கொண்டு இருந்தால் கண்டிப்பாக எழும்பி இடம் கொடுப்பேன்.
2. நம் நாட்டின் பொது சொத்துக்களை காப்பது என் கடமை எனவே என்னாலோ என் நண்பர்களாலோ அழிவு நேராதவாறு காப்பேன்.

பொன்மொழி
உங்கள் நம்பிக்கை உடனான முயற்சியை நீங்கள் நிறுத்தும்வரை எதுவும் உண்மையில் முடிந்துவிடாது.
--- ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்

பொது அறிவு
ஜூன் 17-இன்று உலக பாலைவனமாக்கல் எதிர்ப்பு தினம்
1. உலக அளவில் மிகவும் வறண்டு காணப்படும் பெரிய பாலைவனம் எது?
அடகாமா பாலைவனம் (தென்அமெரிக்கா -பரப்பளவு1,05,000 ச. கி.மீ)
2. உலகின் மிகப் பரந்த வெப்ப பாலைவனம் எது?
சஹாரா பாலைவனம் (ஆப்பிரிக்கா -பரப்பளவு 90,00,000ச.கி.மீ)

English words & meanings
Fin - a body part of fish useful for swimming, மீனின் துடுப்பு
Fabric - cloth made by weaving cotton, silk, wool together, நெய்யப் பட்ட துணி.

ஆரோக்ய வாழ்வு
தினமும் 2  பேரீச்சம்பழத்துடன் ஒரு டம்ளர் பால் சாப்பிட்டு வந்தால் இரத்தம் விருத்திடையும்.

Some important  abbreviations for students
VCD - Video Compact Disk 
DVD - Digital Compact Disk

நீதிக்கதை
ஒரு ஊரிலே ஏழைத் தாய் ஒருத்தி வாழ்ந்து வந்தாள். அவள் மிகவும் அன்பானவள். அவளுக்கு ஒரே ஒரு மகன் இருந்தான். அவனது பெயர் பெலிக்ஸ். அம்மாவைப் போலவே அன்பான குணங்கள் நிறைந்தவன். ஆனால், நல்ல பலசாலி. நாளுக்கு நாள் பலம் மிக்கவனாக அவன் வளர்ந்து வந்தான்.

அந்த ஊர் அரசன் மிகவும் கர்வம் பிடித்தவன்; இரக்கமில்லாதவன். ஏழைகளைத் துன்புறுத்துவதில் இன்பங் காண்பவன்.

எல்லாவிதமான போர் முறைகளையும் கற்றுத் தேர்ந்து கொண்டான். அங்கிருந்த எல்லா வீரர்களையும் அவன் சண்டையிட்டுத் தோற்கடித்தான். அதனால் அங்குள்ள மக்கள் எல்லாரும் அவனுக்கு “மகாவீரன்’ என்ற பட்டத்தைச் சூட்டினர். மகாவீரன் பெலிக்ஸ் தன்னுடைய பலத்தையும் ஆற்றலையும் தவறான விஷயங்களுக்காக ஒரு போதும் பயன்படுத்தவில்லை. மக்களின் நன்மைக்காகவே தன் வீரத்தை பயன்படுத்தி வந்தான். கொடிய காட்டு மிருகங்கள் அந்த ஊரின் வயல்களுக்குள் புகுந்து நாசஞ் செய்த போது அவன் அவற்றை வேட்டையாடிக் கொன்றான். இதனால் மக்கள் அவன் மீது மேலும் அன்பு கொண்டனர்.

இவனது வீரச்செயல் அரசனின் காதுகளில் வீழ்ந்தது. அரசனுக்கு அவன் மீது வெறுப்பு ஏற்பட்டது. இப்படியே இவனது புகழை வளரவிட்டால் தனக்கும் ஆபத்து ஏற்படும் என்று எண்ணினான். எனவே, பெலிக்ஸ்சை எப்படியும் அழித்துவிட நினைத்தான் அரசன்.பெலிக்ஸ்சை எப்படி அழிப்பது என்று அவன் யோசித்தான். பெலிக்ஸ்சை போன்ற பலசாலியோடு மோதுவதற்கு யாரும் முன்வர மறுத்துவிட்டனர். அரசனுக்கு இதனால் மிகுந்த ஏமாற்றமாகி விட்டது.

தந்திரத்தாலும், வஞ்சனையாலுந்தான் இவனை வெற்றி கொள்ள வேண்டுமென்ற முடிவுக்கு அரசன் வந்தான்.பெலிக்ஸை அரசன் கொல்ல நினைத்த விஷயம் அவனுக்கு தெரிய வந்து கொஞ்சமும் தாமதியாது அவன் தன்னுடைய தாயையும் அழைத்துக் கொண்டு மாயமாக அங்கிருந்து மறைந்து விட்டான். அங்குள்ள தன் பிரியமான தோழர்களான சின்னஞ்சிறு குழந்தைகளை விட்டுப் பிரிந்து போவது தான் பெலிக்ஸ்க்கு மிகவும் கவலையை அளித்தது.

ஒரு நாள்—அந்த ஊருக்கு ஒரு பூதம் வந்தது. அந்த பூதம் மிகவும் பிரமாண்டமானதாயிருந்தது. அது மூச்சுவிட்டால் புகை புஸ்புஸ்ஸென்று கிளம்பிற்று. வாயைத் திறந்தாலோ நெருப்புக் கக்கிற்று. பெரிய முட்கள் நிறைந்த பனைமரம் போல அதன் வால் நீண்டிருந்தது. தனது அச்சமூட்டும் வாலினால் அது மிருகங்களையும் சுழற்றிப் பிடித்து அடித்துக் கொன்றது.
இதனால் ஊர் மக்கள் வெளியே வர அஞ்சினர். வீட்டுக்குள்ளேயே அடைந்து கொண்டனர்.

அவர்கள் வயலுக்குப் போகாததால் பயிர் செய்ய முடியவில்லை. இதனால் அந்த ஊரில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. பெலிக்ஸ் ஒருவனாலேயே அந்த விலங்குப் பூதத்தைக் கொல்ல முடியும் என நினைத்த அரசன் அவனைத் தேடிக் கண்டுபிடிக்க ஒற்றர்களை எல்லாத் திசைகளுக்கும் அனுப்பி வைத்தான். அவர்களும் பெலிக்ஸ் இருக்குமிடத்தை அறிந்து கொண்டனர். அரசனுக்குச் செய்தியை உடனே அறியப்படுத்தினர்.

உடனே அரசன், பெலிக்ஸ்சை தனது அரண்மனைக்கு இழுத்து வரும்படி கட்டளையிட்டான். படை வீரர்கள் அவனைக் கைது செய்ய முயன்றனர். பெலிக்ஸ் அவர்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு திசையில் வீசி எறிந்தான். படை வீரர்கள் எதுவும் செய்ய முடியாமல் அங்கிருந்து திரும்பி ஓடிப் போய் அரசனிடம் நடந்தவற்றைக் கூறினர்.அரண்மனையில் எல்லாரும் ஒன்றாகக் கூடி யோசித்தனர். கடைசியில் பெலிக்ஸ்சிடம், விலங்கு பூதத்திடம் இருந்து தங்களைக் காப்பாற்றும்படி கேட்க குழந்தைகளை அனுப்பி வைப்பதென்று முடிவாயிற்று. அப்படியே அவன் இருந்த வீட்டிற்கு குழந்தைகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

தாங்கள் பூதத்திற்குப் பயந்து வாழ்வதை குழந்தைகள் பயத்தோடு அழுதபடியே கூறியதைக் கேட்க பெலிக்ஸ் மிகவும் இரக்கம் கொண்டான். அந்தக் குழந்தைகளின் கண்ணீரை அவன் துடைத்து அவர்களுக்கு ஆறுதல் வார்த்தை சொன்னான். விலங்குப் பூதத்தோடு தான் சண்டையிட்டு அதை வெல்வதாக அவர்களுக்கு வாக்குறுதி அளித்தான்.பின்னர் அவன் பனிரெண்டு பீப்பாய் நிறையத் தாரையும், பனிரெண்டு வண்டியில் வைக்கோலையும் சேகரித்தான். பெரியதொரு தண்டாயுதத்தையும் எடுத்துக் கொண்டான். பூதத்தின் குகை வாசலிலே இவற்றோடு போய் நின்ற அவன், பூதத்தை தன்னோடு சண்டைக்கு வரும்படி சவால் விட்டான்.

பூதம் ஆவென்று வாயைப் பிளந்து சீறியபடி அவனைக் கடிக்க வந்தது. உடனே கொதிக்க வைத்த தார்க் குழம்பை அதன் வாயினுள்ளே ஊற்றினான். அந்தத் திரவம் பூதத்தின் பற்களையும் வாயையும் கெட்டியாகப் பிடித்து, அது வாயைத் திறக்காமல் செய்துவிட்டது. தனது கையில் தண்டாயுதத்தை எடுத்து அதன் முகம், உடலெங்கும் ஓங்கி அடிக்கத் தொடங்கினான். ஏதும் செய்ய முடியாத பூதம் தனக்கு இரக்கம் காட்டும்படி மன்றாடியது. தீமைக்கு ஒருபோதும் இரக்கம் காண்பிக்கக் கூடாது என்று எண்ணினான் பெலிக்ஸ். பெரிய ஏரை அந்த பூதத்தின் மேல் பூட்டி, நகரத்தின் வயல் முழுவதையும் நன்றாக உழுது முடித்தான் பெலிக்ஸ்.

இவ்வளவு நாளும் வீட்டுக்குள் அடைந்து கிடந்த மக்கள், வெளியே வந்தனர். பெலிக்ஸ்சை வாழ்த்தினர். ஆடிப்பாடி மகிழ்ந்தனர். குழந்தைகள் பெலிக்ஸ்சை சுற்றி நின்று மகிழ்ந்தனர்.பிறகு பூதத்தை மன்னித்து அதை அந்த ஊரை விட்டே போய்விடும்படி கூறினான்.

பூதமும் அங்கிருந்து போய்விட்டது. இவ்வளவு காலமும் கொடியவனாக நடந்து வந்த அரசன் தனது குணத்தை மாற்றிக் கொண்டான். பெலிக்ஸை மிகவும் போற்றினான். மீண்டும் அவனையும் அவனது தாயாரையும் தனது ஊருக்கே வரச் செய்தான். பெலிக்ஸை அரசன் தனது படைத் தளபதியாக நியமித்து ஆனந்தமாக வாழ்ந்து வரலானான்.

தூய தமிழ் சொற்கள் கற்போம்

அநேகம் - பல
அபிப்ராயம் - கருத்து
அபாயம் - இடர்
அர்த்தம் -  பாெருள்
அனுபவம் - பட்டறிவு

இன்றைய செய்திகள்

17.06.2019

* தமிழகத்தில் தடை செய்யப்பட்ட  பிளாஸ்டிக்  பொருள்களைப் பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை திங்கள்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.

* பீகார் மாநிலத்தில் சுட்டெரித்து வரும் வெயிலின் தாக்கத்துக்கு 3 மாவட்டங்களில் மட்டும் 56 பேர் உயிரிழந்துள்ளனர்.

* சென்னையில், குடிநீர் சம்பந்தமான புகார்களுக்கு, சிறப்பு அலுவலர்களை வாரியம் நியமித்துள்ளது.

* உலக ஆக்கி தொடர் இறுதி சுற்றில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

* பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 57 ரன்களை கடந்து விளையாடி வரும் கோலி, ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் குறைந்த இன்னிங்ஸில் 11,000 ரன்கள் எடுத்த வீரர் என்ற உலக சாதனையை படைத்தார்.

* உலக கோப்பை கிரிக்கெட் :  பாகிஸ்தான் அணியை 89 ரன்கள் வித்யாசத்தில் (டக்வத் லூயிஸ் விதிப்படி) வீழ்த்தியது இந்தியா.

Today's Headlines

🌸The procedure for imposing penalties for banned plastic products in Tamil Nadu comes into effect from Monday.

 🌸, 56 people have died in 3 districts in Bihar  state for the impact of the awning

 🌸 In Chennai, the Board has appointed  Special Officers for drinking water complaints.

🌸 In the final round of the World hockey event, Indian team defeated South Africa by 5-1 in the final match and won the championship title.

 🌸Kohli was playing with 57 runs in the match against Pakistan and created a world record of 11,000 runs in the lowest innings at the ODI Cricket Ground.

 🌸 World Cup Cricket: India won by 89 runs ( DLS method) against Pakistan.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பயோமெட்ரிக் முறையை விரிவுபடுத்தும் வரை ஆப்பில் வருகை பதிவு.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி

தமிழகத்திலுள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் முதற்கட்டமாக 3,688 அரசு உயர்நிலை பள்ளிகளிலும், 4,040 மேல்நிலை பள்ளிகளிலும் பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறை அமலுக்கு வந்துள்ளது. இதில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள், பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவேட்டில் தங்கது வருகையை பதிவு செய்து வருகின்றனர். இதன் மூலம் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு ஊழியர்கள் காலதாமதமாக வருவது குறைந்துள்ளது. மேலும் ஆதாரில் உள்ள முழுவிவரங்களுடன் ஆசிரியர்களின் விவரங்கள், இஎம்ஐஎஸ் என்ற இணையதளத்திலும் தனி சாப்ட்வேரிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே தலைநகர் சென்னையில் இருந்தபடியே, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளின் வருகை பதிவேட்டு விவரங்களை கண்காணிக்கும் வசதி ஏற்பட்டுள்ளது. இதனிடையே அனைத்து அரசு மற்றும் நிதியுதவி பள்ளியில் பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், பிற பணியாளர்களின் விவரங்கள் பள்ளிக்கல்வித்துறைக்கென உருவாக்கப்பட்டுள்ள டிஎன் ஸ்கூல்ஸ் என்ற ஆப்பில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இது பற்றி தகவல் தெரிவித்துள்ள கல்வித்துறை அதிகாரிகள், 2019 - 2020-ம் கல்வியாண்டில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என அனைத்து தரப்பினரின் வருகை பதிவு டிஎன் ஸ்கூல்ஸ் என்ற ஆப்பில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். tn schools ஆப் மூலம் தினமும் காலை 10.30 மணிக்குள் வருகை பதிவினை, பதிவு செய்ய வேண்டும் என அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். தற்போது உயர்நிலை பள்ளிகள் மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பயோமெட்ரிக் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் மற்ற எல்லா பள்ளிகளுக்கும் இம்முறை விரிவுப்படுத்தப்பட உள்ளது. அதுவரை இந்த tn schools ஆப் வாயிலாக வருகை பதிவேட்டை பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆப் மூலம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகைபதிவு கண்காணிக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த கல்வியாண்டில்அனைத்து பள்ளிகளிலும் இது கட்டாயமாக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகைப்பதிவை பயோமெட்ரிக் கருவியில் பதிவு செய்ய கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர் அனைவரும் ஒரே நேரத்தில் பயோமெட்ரிக் கருவியில் வருகைப்பதிவு செய்ய காலதாமதம் ஏற்படுவதாக ஆசிரியர்கள் தரப்பில் கூறப்பட்டது இதனையடுத்து வருகைப்பதிவு செய்ய கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. காலை 9.30 மணிக்கு பதிலாக 9.35 மணிக்குள் ஆசிரியர்கள் வருகைப்பதிவு செய்ய வேண்டும். அதே போல மாலை 4.30 மணிக்கு பதிலாக மாலை 4.35 மணிக்கு பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

MBA REFERENCE BOOKS (SET/NET)

MANAGEMENT PRINCIPLES
 TAMILSELVI HPH, SUBBA RAO  - HPH, DINKAR PAGARE
ORGANISATIONAL BEHAVIOUR
SATHYASUNDARI – HPH,
STEPHEN ROBBINS
MANAGERIAL ECONOMICS
BUSINESS ECONOMICS –S. SANKARAN
MACRO ECONOMICS – S. SANKARAN - MARGHAM
ACCOUNTANCY
VINAYAKAM, MANI, NAGARAJAN - SCHAND
COST ACCOUNTING
JAIN AND NARANG
MANAGEMENT ACCOUNTING
SHARMA, GUPTA
STATISTICAL METHODS – QT I
R. GUPTA
BUSINESS COMMUNICATION
RAJENDRA PAUL, KORLAHALLI
PRODUCTION AND MATERIALS MGT
SARAVANAVEL, SUMATHI – MARGHAM
MARKETING MANAGEMENT
PILLAI & BAGAVATHI, PHILIP KOTLER
FINANCIAL MANAGEMENT
MGT A/C – SHARMA GUPTA

FM – PARAMASIVAM, SUBRAMANIAN (NEW AGE)
HUMAN RESOURCE MANAGEMENT
PERSONNEL MGT: CB MAMORIA, VSP RAO – HPH
QT II – OPERATIONS RESEARCH
GUPTA, MANMOHAN (TWO AUTHOR)
RESEARCH METHODOLOGY
CR KOTHARI
BUSINESS ENVIRONMENT
FRANCIS CHERUNILAM –HPH
MANAGEMENT INFORMATION SYSTEM
JAMES A.O.BRIEN, INTRODUCTION OF COMPUTERS
STRATEGIC MANAGEMENT
BUSINESS POLICY- AZAR, KAZMI, STRATEGIC MGT- FRANCIS CHERUNILAM HPH BOOKS
INTERNATIONAL MARKETING
FRANCIS CHERUNILAM – HPH
VARSHNEY PATTACHARYA
CONSUMER BEHAVIOUR
SCHIFFMAN, KANUK – PEARSON
BUSINESS LAW, COMPANY LAW, LABOUR LAW
MERICHANTILE LAW – N.D.KAPOOR BUSINESS LAW - J. JAYASANKAR MARGHAM
ENTREPRENEURSHIP DEVELOPMENT
GUPTA, SRINIVASAN
ADVERTISING AND SALES PROMOTION
PILLAI & BAGAVATHI, PHILIP KOTLER SARAVANAVEL, SUMATHI
MARKETING RESEARCH
S.D. SHARMA
HUMAN RESOURCE DEVELOPMENT
P.C. TRIPATHI – SULTAN CHAND
INDUSTRIAL MARKETING
HILL, ALEXANDER AND CROSS
PREPARED BY: S. MAHALINGAM M.B.A., M.PHIL., M.COM., 237, TAMIL NAGAR, KURUMANDUR – 638457, GOBI TK, ERODE DT.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE